(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

புருஷன்” என சொல்ல அதைக்கேட்டபடி வந்த கணக்குப்பிள்ளையோ

  

”ஏம்மா இப்படியெல்லாம் பேசி வைக்கற, அங்க பாரு அதுங்களோட பாசத்தை பாரு எல்லாமே வேட்டைநாய்ங்க கடிச்சா விசம் ஏறிடும் ஆனா, எல்லாம் எவ்ளோ பாசமா கொம்பன் கூட இருக்கறதை பாரு”

  

”இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை“ என சொல்லிவிட்டு கொம்பனை பார்த்தாள் அவனோ அனைத்து நாய்களுக்கும் சாப்பாடு போட்டுவிட்டு சில நாய்களை வாக்கிங் போல அழைத்துச் சென்றான், அந்த நாய்களுடன் அவன் செல்வது பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தது, அவளோ வாய் பிளந்து ஆச்சர்யத்துடன் பார்க்க கணக்குப்பிள்ளையோ

  

”கொம்பனை சைட் அடிக்கிறியா” என கேட்க அவளோ உடனே அவனை முறைத்து

  

”“ஆமா கொம்பன் என்ன வீரசாகசம் செய்றாரா இல்லை நல்லது செய்றாரா சைட் அடிக்கறதுக்கு நாயை கூட்டிட்டுப் போறதெல்லாம் அழகா அதை வேற நான் பார்த்து வைக்கனுமா சே சே” என்றாள். அதில் அவனுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.

  

கொம்பனின் பெறறோரோ கொம்பனை தனியாக அழைத்து கண்டித்தனர். அவன் கெஞ்சினான் போராடினான் ஆனால் அவனது பேச்சு எடுபடவில்லை. இறுதியாக அவனிடம் இருந்த நாய்களை ஒருவன் வந்து எடுத்து செல்ல வண்டியுடன் வந்து விட்டான், இவ்வனைத்தும் அவனின் தந்தையின் ஏற்பாடு கொம்பனால் ஒன்றுமே செய்ய இயலவில்லை, கண்முன்னே அவன் வளர்த்த நாய்கள் கூண்டில் அடைக்கப்பட்டு வண்டியில் ஏற்றப்படுவதைக் கண்டு கண்கள் கலங்கினான். அவன் கலங்குவதைக்கண்ட காவேரியோ அவனிடம் வந்து

  

”ச்ச்ச்” என பரிதாபமாக உச்சு கொட்ட அவனோ

  

”நீயெல்லாம் மனுஷியா கல்நெஞ்சம் பிடிச்சவளே”

  

“என்னை பாராட்டினதுக்கு ரொம்ப நன்றி ம் நீ வளர்த்த நாய்கள் உன்னை விட்டு போனதை

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.