”அவ்ளோ சீக்கிரம் உனக்கு விடுதலை கொடுப்பேன்னு நினைச்சியா உனக்கு நரகத்தை காட்டாம நான் விடமாட்டேன்”
“இப்ப மட்டும் என்னவாம் நான் நரகத்திலதானே இருக்கேன்”
”இது எல்லாம் வெறும் சாம்பிள்மா போக போக நீ அனுபவிப்ப பாரு”
”அதை அப்புறம் பார்த்துக்கலாம் இப்ப மரியாதையா என்கிட்ட மன்னிப்பு கேளு”
“முடியாது” என சொல்ல அவன் பேசாமல் அவளை விடாமல் பிடித்திருந்தான்
அவளும் பேசாமல் அவன் தரும் கஷ்டத்தை பொறுத்துக் கொண்டாள். நேரம் சென்றுக் கொண்டேயிருந்தது, இருவருக்குமே வலி ஏற்பட்டது, ஆனாலும் பிடிவாதமாக இருந்தார்கள், யாரும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை.
அப்படியே ஒரு அரைமணி நேரம் கடந்ததும் மெதுவாக காவேரியே இறங்கி வந்தாள், அவனிடம் தர்க்கம் புரிவதைவிட வலியை போக்குவது மேல் என நினைத்தவள் அவனையே பார்த்தாள், அவனோ ஆரம்பத்தில் கோபமாக இருந்தவன் நேரம் செல்ல செல்ல அவளின் அருகாமையை விரும்பினான், அதற்காகவே அவளை பிடித்து வைத்திருந்தான், அவனின் பார்வையில் வித்தியாசம் இருப்பதைக்கண்டு திகைத்தாள்.
அவனது பிடியில் இறுக்கம் குறைந்திருந்தது அதை அப்போதுதான் உணர்ந்தாள், சரி உடனே அவனை விலக்கிவிட்டு வரும் எண்ணம் கூட அவளுக்கு எழவில்லை, அவனது முகத்தையே பார்த்தாள், அவனோ அவளால் ஏற்பட்ட உணர்ச்சிகளுக்கு அடிமையாகிப் போனான் உணர்ச்சிகளின் வெளிப்பாடு அவனின் முகத்தில் அப்பட்டமாக தெரிய அதைக்கண்டுக் கொண்டாள் காவேரி
“ஓஹோ இவன் வேற உலகத்தில சஞ்சாரம் செய்றான் போல, இப்ப என்ன செய்யலாம் ம் இவனை வெறுப்பேத்தலாம்” என நினைத்தவள் வேண்டுமென்றே தன் முகபாவனையை