”இதுதானா உன்னோட வீரம், கோழைத்தனமா என்னை கிணத்துல போட்டு சாகடிக்க பார்த்தியே, என் முன்னாடி வாழ்ந்து காட்டுவேன்னு பார்த்தேன், ம்ஹும் நீ என்ன இப்படியிருக்க உன்னை ஆயிரம் யானைக்கு சமம்னு சொன்னாங்க பூனை மாதிரியிருக்க”
”போதும் அடங்கறியா உன்மேல கொலை வெறியில இருக்கேன்”
”சும்மா என்னையே சத்தம் போடாத, இது என் வீடு, இங்க இப்படி குரலை உயர்த்தி பேசற வேலையை வைச்சிக்காத”
”சே நான் பாசமா வளர்த்த நாய்களுக்கு விலை பேசி பணத்தை வாங்கி சே” என்றான் வெறுப்புடன்
”இதப்பாரு அதையெல்லாம் செய்தது எவனோ, உனக்கு வரவேண்டிய கமிஷன் பணத்தைதானே நான் வாங்கி வைச்சிக்கிட்டேன், இது ஒண்ணும் தப்பில்லை மொத்த பணத்தையும் வாங்கியிருந்தாதான் தப்பு”
”நீ செய்தாலும் செய்வடி”
”சே சே அந்தளவுக்கு நான் சுயநலவாதியில்லை, எனக்கு வரவேண்டிய பணம் வந்தா போதும், அப்புறம் நாளையில இருந்து நீயே தனியா போய் எங்களோட தோப்புகளை பார்த்துக்க, தினமும் உன்கூட வந்து குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கற மாதிரி உனக்கு சொல்லித்தர எனக்கு நேரமில்லை”
”நீ தயவு செஞ்சி என்கூட வராதே நானே எல்லாம் பார்த்துக்குவேன்”
”நீ சொதப்பினா நஷ்டம் எங்களுக்குதான்”
”நஷ்டம் வராத மாதிரி பார்த்துக்கறேன் போதுமா”
”போதும் சரி வா உள்ள போலாம்”