”நான் வரலை”
”அட வாய்யா ரொம்பத்தான் வா வா” என அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல அவனோ
”விடு விடுங்கறேன்ல“ என கத்திக் கொண்டே வந்தான். அவளது அறைக்கு வந்ததும் அவனை உள்ளே விட்டு கதவை சாத்திவிட்டு அவனிடம் வந்தாள்
”எதுக்கு இப்ப கதவை சாத்தற”
”ப்ச் என்ன அவசரம் பொறு” என்றாள் ஒரு மார்க்கமாக அவளின் பேச்சைக் கேட்டு நடுங்கினான் கொம்பன்
”நான் வெளிய போறேன்”
“இருங்கறேன்ல”
”அம்மா தாயே ஆளைவிடு நான் போறேன்” என சொல்ல அவளோ படுக்கையில் அமர்ந்து அவனை அழைத்தாள்
”வா இப்படி வந்து உட்காரு”
”வேணாம்“
”அட வா உன்னை நான் ஒண்ணும் கடிச்சி தின்னிட மாட்டேன்”
”நீ செய்ய மாட்டேன்னு தெரியும் நான் செய்துட்டா என்ன செய்வ” என கேட்க அவளோ மென்மையாக சிரித்தபடியே தலையணைக்கு கீழ் இருந்த அருவாளை எடுத்து அவனிடம் காட்ட அவனோ நொந்துப் போய் படுக்கையில் சென்று அமர்ந்தான்