நல்லது செய்றவனை கஷ்டப்படுத்தாத, அவனுக்குன்னு இந்த ஊர்ல நிறைய மதிப்பு மரியாதையிருக்கு, அதை நீ கெடுத்துடாத, உனக்கு கெட்ட பேர் வராம பார்த்துக்கம்மா
கொம்பன் ரொம்ப நல்லவன், அவனை அனுசரிச்சி வாழ்ந்துக்க, எப்பவுமே அவனுக்கு அடங்கித்தான் நீ இருக்கனுமே தவிர அவனை அடக்கி வைக்க பார்க்காத, ஏன்னா அது உன்னால முடியாது, கொம்பன் ஆயிரம் யானைக்கு சமம் ஆனவன், உன்னால அவனை கட்டுக்குள்ள வைக்க முடியாது, அப்பா வீட்ல இருக்கறதை விட மாமனார் மாமியார் வீட்ல இருக்கறதுதான் ஒரு பொண்ணுக்கு அழகு
உனக்காக கொம்பன் எந்தளவுக்கு விட்டுக்கொடுத்து போறான்னு பார்க்கறல்ல, நீயும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போனாதான் என்ன குறைஞ்சா போயிடப்போற, எல்லாம் கொம்பன் உன்னை வைச்சி காப்பாத்துவான், அதுக்கு நீ அவனோட விருப்பப்படி வாழு” என ஊர்க்காரர்கள் ஆளாளுக்கு அறிவுரை சொல்லி விட்டுச் செல்ல காவேரியின் கோபம் அதிகரித்தது.
கொம்பனுக்கு திக்கென்றது இது தேவையா என்பது போல நொந்துக் கொண்டான், காவேரியை ஓரக்கண்ணில் பார்த்தான், எரிமலை போல கொதித்துக் கொண்டிருந்தாள். இந்நிலையில் இவளை சமாதானப்படுத்துவது கடினம் என அறிந்தவன் மெதுவாக பேசாமல் நடக்க முயல அவளோ தடுத்தாள்
”கொம்பா” என கோபமாக அழைக்க அந்த அழைப்பைக் கேட்டே அதிர்ந்த கொம்பனோ அவசரமாக அவளிடம்
”அம்மா தாயே இது நடுரோடு எதுவாயிருந்தாலும் வீட்ல போய் வைச்சிக்கலாம்”
”முடியாது என்ன என்மேல தப்பிருக்கற மாதிரி ஆளாளுக்கு அறிவுரை சொல்லிட்டுப் போறானுங்க”
”விடு அதையெல்லாம் நீ பெரிசா நினைக்காத”