(Reading time: 34 - 67 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”என்னால முடியாது”

  

”முடியாது”

  

”முடியாது”

  

என சொல்ல அவளோ கோபமாக முறைத்தாள்.

  

சில நொடிகள் கழித்து காவேரி தலைநிமிர்ந்து கம்பீரமாக நடக்க அவள் பக்கத்தில் கொம்பனோ கைகட்டி வாய் பொத்தி பவ்யமாக நடந்துச் சென்றான், அதைக்கண்ட ஊர்க்காரர்கள் வியந்தார்கள், அதிர்ந்தார்கள், வாய் பிளந்தார்கள், அவர்களின் முகபாவனையைக்கண்டு காவேரி மகிழ்ந்தாள், கொம்பனுக்கோ கொடுமையாக இருந்தது, அப்படியும் யாராவது பேச முன் வந்த போதும் கொம்பனே கண்ணால் சைகை செய்து விரட்ட அவர்கள் புரிந்துக் கொண்டார்கள், இவ்விசயம் உடனுக்குடனே ஊருக்குள் பரவியது.

  

கொம்பனின் தந்தைக்கும் செய்தி வர அவர் அரக்க பரக்க ஓடியே வந்தார், சரியாக கொம்பன் வரும் தெருவில் வந்து நின்றவர் அவனின் செயலைக்கண்டு அதிர்ந்தார் பின் கண்கள் கலங்கினார். அவர் இருப்பதைக்கண்ட கொம்பனோ நொந்தே போனான்

  

”எதை எங்கப்பா பார்க்க கூடாதுன்னு நினைச்சேனோ அதை பார்த்துட்டாரே, பாவம் அவர் வருத்தப்படறாரு என்ன செய்றது, இவளை என்னால அடக்க முடியலை நான்தான் அடங்கிப் போகனும் பரவாயில்லை, இன்னும் கொஞ்ச தூரம்தானே வீடு வந்த பின்னாடி இவளை பார்த்துக்கலாம்” என மனதில் நினைத்தபடியே வர காவேரியோ தன் மாமனாரைக்கண்டும் காணாதது போல திமிராக நடந்துச் சென்றாள், கொம்பனின் தந்தைக்கோ துக்கம் தொண்டையடைத்தது கொம்பன் அவரை கடக்கும் போது

  

”மகனே கொம்பா” என அன்பாக அழைக்க அதைக்கேட்டும் அவன் நிற்கவில்லை, தொடர்ந்து நடந்துக் கொண்டே உள்ளுக்குள் குமுறிக் கொண்டே சென்றான்.

  

அவனின் செயலை அவர் எதிர்பார்க்கவில்லை, மனம் வெந்துபோய் தன் மனைவியிடம்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.