(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

அடுத்தவங்களை அடிக்க உதைக்க நல்லா தெரியும், சரியா நாலு வார்த்தை நல்லதா பேசகூட தெரியாது முட்டாள்”

  

”போதும் போதும் உன் ஹஸ்பெண்ட்டை புகழ்ந்தது பாவம் இதை அவர் கேட்டா வருத்தப்படுவாரு”

  

”நான் நேராவே இப்படி அவன்கிட்ட பேசிட்டேன்”

  

”அச்சோ வருத்தப்பட்டாரா என்ன”

  

”இல்லை நாக்கு பிடுங்கற மாதிரி எவ்வளவோ திட்டி அவமானப்படுத்தியும் என்னை விடமாட்டேங்கறான், நான் பேசின பேச்சைக் கேட்டா மத்தவங்க தூக்குல தொங்கியிருப்பாங்க ஆனா இவன் கல்நெஞ்சுக்காரன்”

  

”ரிலாக்ஸ் பொங்காத, பிபி அதிகமாகப் போகுது, அமைதியா பேசு கூல் ஜானு கூல்” என சொல்ல ஜானகி தனது கோபத்தை குறைத்துக் கொண்டு மெல்ல கண்கள் கலங்கினாள்

  

”சொந்தம் விட்டுப் போக கூடாதுன்னு என்னை பிடிச்சி அந்த வேங்கையனுக்கு கட்டி வைச்சிட்டாங்க, நான் எவ்வளவோ சொல்லியும் யாரும் என் பேச்சை மதிக்கலை எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலைன்னு எல்லார்கிட்டயும் சொன்னேன் ஆனா, யாரும் அதை பெரிசா எடுத்துக்கலை”

  

”வேங்கையன் கூடவா உன் பேச்சை கேட்கலை”

  

“ஆமா அந்தாளு ஒரு சுயநலவாதி, யாரும் அந்தாளுக்கு பொண்ணு கொடுக்கலை, என்னை விட்டா இனி அந்தாளுக்கு கல்யாணமே ஆகாதுன்னு, என்னோட விருப்பத்தை மதிக்காம என்னை கல்யாணம் செய்துக்கிட்டான் படுபாவி”

  

”சரி உன் மூர்த்தி மாமா என்ன ஆனாரு, அவராவது உன் சார்பா பேசியிருக்கலாமே”

  

”எப்படி பேசறது வேங்கையனை நீ என்னன்னு நினைச்ச, புலிடி, அவருக்கிட்ட அடிவாங்கி சாக

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.