”ஆமாம் வந்துடுவா நீ போய் குளிச்சிட்டு வா, நீ எழுந்ததும் தகவல் சொல்லச் சொன்னா இப்பவே போன் பண்ணி அவளை கூப்பிடறேன்”
”ஓகே அங்கிள் ஆமா வேணி ஆன்ட்டி எங்க அங்கிள்”
”சமையல் செய்து முடிச்சிட்டு ஓய்வெடுக்கறா”
”ஓஹோ சரி அங்கிள் நான் போய் குளிச்சிட்டு சீக்கிரமா வந்துடறேன்” என சொல்லிவிட்டு மஹதி குளிக்கச் செல்ல குபேரனோ தன் மகள் ஜானகிக்கு போன் செய்து மஹதி எழுந்துவிட்ட தகவல் சொல்லிவிட்டு தன் மனைவியை எழுப்பச் சென்றார்
மஹதியும் ஆனந்தமாக களைப்பு தீர ஒரு குளியல் போட்டுவிட்டு வந்தாள். அவள் வரவும் ஜானகி இருக்கவும் சரியாக இருந்தது
”ஹாய்டி எப்ப வந்த” என ஜானகியிடம் மஹதி கேட்க
”நான் வந்து கால்மணி நேரம் ஆகுது”
”ஓ உன் ஹஸ்பெண்ட் வீடு பக்கத்துலதான் இருக்கா”
”பக்கத்து தெருவில இருக்கு”
”அப்படியா சரி சரி” என சொல்ல வேணியின் குரல் கேட்டது
”சாப்பாடு எல்லாம் எடுத்து வைச்சிட்டேன், வாங்க எல்லாரும்” என அழைக்க மஹதியும் ஜானகியும் சாப்பிடச் சென்றார்கள், ஏற்கனவே குபேரன் அங்கு தயாராக அமர்ந்திருக்க அவருக்கு பக்கத்தில் இவ்விருவரும் அமர அனைவருக்குமாக வேணியே சாப்பாடு பரிமாறினார்.