(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”எனக்கு இந்த வாழ்க்கையே வேணாம்ங்கறேன், 6 மாசம் என்ன 60 வருஷம் ஆனாலும் சரி, என்னால வேங்கையனை ஏத்துக்க முடியாது, அவனை மனுஷனா கூட என்னால பார்க்க முடியலை, இதுதான் உண்மை இதை நான் சொன்னா யாரும் ஒத்துக்க மாட்டேங்கறாங்க”

  

”ஓகே ஆமா உன் அப்பா அம்மாவுக்கு உன்னோட டைவர்ஸ் விசயத்தில விருப்பம் இல்லை போல”

  

”ஆமாம் அவங்க ஆசைப்பட்டு நடத்தின கல்யாணமாச்சே, அவங்களைப் பொறுத்தவரைக்கும் வேங்கையனை விட்டுக் கொடுப்பாங்களா, என்னைதான் திட்டி தீர்க்கறாங்க அவன்கூட சேர்ந்து வாழுன்னு கட்டாயப்படுத்தறாங்க”

  

”கட்டாயப்படுத்தறாங்களா இது தப்பாச்சே“

  

”உனக்குப் புரியுது அவங்களுக்கு புரியலையே, என் வாழ்க்கை நாசமா போச்சி மஹதி, இந்த நரகத்தில இருந்து எப்படி வெளிய வர்றதுன்னு எனக்கு தெரியலை நீதான் உதவி செய்யனும்”

  

”ஓஹோ இதுக்காகதான் என்னை அவசர அவசரமா கூப்பிட்டியா, சரி ஒரு விசயம் சொல்லு உன்னோட இந்த பிரச்சனைக்கும் எனக்கு நீ துரோகம் செய்ததுக்கும் என்ன சம்பந்தம்”

  

”கோர்ட் வரைக்கும் போய் வந்ததால எல்லாருக்கும் அவமானமாயிடுச்சி, மூர்த்தி மாமா கல்யாணம் ஆகாம இருக்கறவரைக்கும் நான் வேங்கையனோட வாழமாட்டேன்னு நினைச்சி அவசர அவசரமா மூர்த்தி மாமாவுக்கு பொண்ணு தேடினாங்க, அப்ப பார்த்ததில நிறைய பொண்ணுங்க கிடைச்சாங்க ஆனா, என்னால மூர்த்தி மாமாவை யாருக்கும் விட்டுதர முடியலை, ஒவ்வொரு வரனையா கெடுத்துவிட்டேன், கடைசியா உன்னோட வரன் வந்தது. நீ என் தோழின்னு தெரிஞ்சும் உனக்கு மூர்த்தி மாமாவை விட்டுக் கொடுக்க மனசில்லாம கெடுத்துவிட்டேன்”

  

”அதான் எப்படி”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.