(Reading time: 8 - 16 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“இன்ஸ்பெக்டர் சார் நான் உண்மையை தான் சொல்றேன். எனக்கும் அந்த சேகரன் சாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.” அஹல்யாவின் குரல் கோபத்துடன் ஒலித்தது.

  

தென்றல்வாணன் அஹல்யாவை துளைத்து உண்மையை தெரிந்துக் கொள்பவனைப் போல ஒரு பார்வை பார்த்தான்.

  

அப்போது ஏட்டு அவன் பக்கம் வந்தார்.

  

“இன்ஸ்பெக்டர் சார், லாயர் வந்திருக்கார். உங்க கிட்ட உடனே பேசி ஆகனும்னு சொல்றார்,” என தென்றல்வாணனின் காதருகே சொன்னார் ஏட்டு.

  

தென்றல்வாணன் தலையை உயர்த்திப் பார்த்தான். அங்கே அட்வகேட் குணாளனும், சக்தியும் நிற்பது தெரியவும் அவனுடைய முகம் கடுத்தது. வேறு வழி இல்லாமல் எழுந்து வந்தான்.

  

“இன்ஸ்பெக்டர் தேன், என்ன செய்துட்டு இருக்கீங்க? நீங்க பாட்டுக்குக் உங்க இஷ்டத்துக்கு யாரை வேணா கூப்பிட்டு விசாரிப்பீங்களா??? என்ன ஏதுன்னு சொல்ல மாட்டீங்களா?” குணாளன் உடனேயே வந்த வேலையை ஆரம்பித்தார்.

  

தென்றல்வாணன் அபினவை பார்த்து முறைத்தான். அபினவ் என்ன செய்வது என்றுப் புரியாமல் விழிகளை திருப்பிக் கொண்டான்.

  

“இங்கே பாருங்க லாயர் சார், எங்களுக்கு கிடைச்ச புது ப்ரூஃப் வச்சு தான் அஹல்யாவை விசாரணைக்கு வரச் சொன்னோம்,” என லாயரிடம் சொன்னான் தென்றல்வாணன்.

  

“அந்த ப்ரூஃப் பத்தி அஹல்யா கிட்ட சொன்னீங்களா? இல்லை அவங்க ஃபேமிலி, ஃப்ரென்ட்ஸ் யாருக்காவது தகவல் கொடுத்தீங்களா?”

  

“இங்கே பாருங்க, அஹல்யா சேகரனுக்கும் அவங்களுக்கும் தொடர்பே இல்லைன்னு சொன்னது முழு பொய். அவங்க அவன் கிட்ட கொடுத்த போட்டோஸ் எங்களுக்கு கிடைச்சிருக்கு. இதை வச்சு பார்க்கும் போது அவங்க தான்...”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.