”நீயா என்னை போக சொல்ற”
”வேலை விசயமாதான் உன்னை நான் அனுப்பறேன், அங்க போனதும் அம்மா அப்பான்னு அப்படியே ஒட்டிக்கிட்டு அங்கயே இருந்தன்னு வையேன் காலை உடைப்பேன் அதுக்கு அப்புறம் நொண்டிக்கிட்டேதான் காலத்தை ஓட்டனும் புரியுதா”
”வந்துடறேன் நீ என்னை ஏமாத்த பார்க்கற, இவ்ளோ வேலையெல்லாம் எங்கம்மா செய்தது கிடையாது இரு இரு நான் போய் என்ன ஏதுன்னு கேட்டு லிஸ்ட்டோட வரேன்” என கம்பீரமாக பேசிவிட்டு கணக்குபிள்ளையை பார்க்க அவனோ
”நான் வரலை நண்பா நீ கிளம்பு”
”பரவாயில்லை தனியாளாவே நின்னு நான் ஜெயிப்பேன்” என கர்ஜித்துவிட்டு சென்றான் அவன் சென்றதும் கணக்குபிள்ளை காவேரியிடம்
”தங்கச்சி அவன் சின்ன புள்ளைம்மா விவரம் அறியாதவன் அவனுக்கு போய் வீட்டு பாரத்தை தர்றியே பாவம்மா”
”சும்மாயிருங்க அண்ணா, இப்படி அவரை செல்லம் கொஞ்சி விட்டதாலதானே அடிதடி பஞ்சாயத்துன்னு அலையறாரு, கொஞ்சம் அவருக்கும் பொறுப்புகளை தந்தா அவரால வெட்டியா வெளிய சுத்த முடியுமா என்ன”
”இருந்தாலும் ஒரே முட்டா எல்லாத்தையும் தந்தா அவன் பயந்துடுவான்மா”
”ஒண்ணும் ஆகாது அண்ணா நீங்க கவலைப்படாதீங்க“
”சரிம்மா நாளெல்லாம் நீ தோப்புக்கு போனியே என்னாச்சி வேலைகள் கஷ்டமாயிருந்ததா என்ன”