(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அதுசரி ஆம்பளைங்க ஒரே மாதிரியான குணம் படைச்சவங்க அதனால ஒருத்தர் தப்பு இன்னொருத்தர் செய்றப்ப விட்டுக் கொடுத்து போறாங்க ஆனா பொம்பளைங்க அப்படியில்லை தப்புன்னா தப்புதான் சரின்னா சரிதான்னு பேசுவாங்க”

  

”பொம்பளைங்க எல்லாம் பொறாமை பிடிச்சவங்க அவங்களை திருப்திபடுத்தவே முடியாது பணம் காசு நகைங்கன்னு எல்லாத்துக்கும் ஆசைப்படறவங்க”

  

”ஓஹோ ஏன் ஆம்பளைங்களுக்கு பொறாமை குணமே இல்லையா என்ன, ஒரு பொம்பளை நின்னு சாதிச்சி நல்ல பேர் எடுத்தா போதும் உடனே பொறாமைபடறது இன்னொரு பொம்பளையா இருக்காது உன்னைப் போல ஒரு ஆம்பளையாதான் இருக்கும், அப்புறம் என்ன சொன்ன பணம் காசுக்கு ஆசைப்படறவங்களா அப்ப ஆம்பளைங்க என்ன பணத்தாசை இல்லாமலா இருக்காங்க, நாங்க பணம் காசு வேணும்னு நினைக்கறது குடும்பத்துக்காக உங்களை போல பணத்தை ஊதாரியா செலவழிச்சி சுகவாசியா வாழறதுக்கு கிடையாது, எத்தனை ஆம்பளைங்க சீரழிஞ்சி போயிருக்காங்க, அவங்க வீட்டு பொம்பளைங்க குடும்பத்தை காப்பாத்த எவ்ளோ கஷ்டப்படறாங்க அதெல்லாம் தெரியாதா உனக்கு”

  

”ஏய் இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற”

  

”ஆண் பெண் சமம்ன்னு சொல்றேன் ஆம்பளை கால் மேல கால் போட்டு உட்கார்ந்தா பொம்பளையும் கால் மேல கால் போட்டு உட்காரனும் அதை தப்புன்னு சொல்லக்கூடாது”

  

”அப்படியா ஆம்பளைங்க உடம்புல துணியல்லாம அலைவாங்க அது போல உங்களால அலைய முடியுமா”

  

”அடப்பாவி என்ன ஒரு வக்கிர குணம் உனக்கு, பெண்கள் இன்னிக்கு கால கட்டத்தில எவ்ளோ சாதனைகளை படைக்கறாங்க அதை பார்க்காம கேவலமா நினைக்கற, அவங்க சாதிச்ச சாதனைகளை கூட ஆம்பளைங்களால சாதிக்க முடியாது அதை முதல்ல தெரிஞ்சிக்க”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.