(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 09 - சசிரேகா

றுநாள் காலையில் கொம்பனும் கணக்குபிள்ளை ஈஸ்வரனும் நன்றாக தூங்கிக் கொண்டிருக்க அவர்களை பார்த்தவாறு ஒரு இருக்கையை இழுத்து வைத்து அதில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள் காவேரி. அவளின் செய்கையைக்கண்ட சண்முகமோ பதறி

  

”என்னம்மா செய்ற இங்க”

  

”என்னப்பா” என்றாள் வெகுஇயல்பாக கால் ஆட்டிக் கொண்டே

  

”ப்ச் அவங்க தூங்கறதை நீ ஏன் வேடிக்கைப் பார்க்கற”

  

”பொழுது போகலைப்பா அதான்”

  

”இன்னிக்கு எந்த பிரச்சனையையும் இழுத்து விடாதம்மா”

  

”சே சே இல்லைப்பா” என சொல்ல அவரும் நம்பி அங்கிருந்து சென்றார்.

  

அவர் சென்றபின் மெதுவாக உறக்கத்தில் புரண்டான் கொம்பன், அதைக்கண்டவள் அன்பாக அவனை அழைத்தாள்

  

”கொம்பா” அதைக்கேட்ட கொம்பன் இதழில் புன்னகை தவழ்ந்தபடியே திரும்பி படுக்க கணக்குபிள்ளை மீது மோதினான்.

  

”கொம்பா” என மீண்டும் அழைக்க அவனின் புன்னகை இன்னும் விரிந்தது மெதுவாக கணக்குபிள்ளையை கட்டியணைத்தவன்

  

”காவேரி” என முனகியபடியே கணக்குபிள்ளையின் கன்னத்தில் முத்தம் வைக்க அதைக்கண்டு வியந்தாள் காவேரி, அடுத்த நொடி அலறி அடித்து எழுந்தான் கணக்குபிள்ளை, அதில் கொம்பனும் பதட்டமாக எழுந்தான்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.