”கொம்பா டேய் கொம்பா வாடா வெளிய” என கத்த அந்த சத்தம் கேட்டு பயந்த கொம்பனோ தன் தாயிடம்
”அம்மா அம்மா அவள் வந்துட்டாள்மா”
”அமைதியாயிரு ஒண்ணும் இல்லை பயப்படாதடா”
”கொம்பா நீயா வர்றியா இல்லை நான் வரவா” என காவேரி கத்த கொம்பனோ அரண்டான் அவனது தாயோ
”இதப்பாரு அவள் முன்னாடிதானே இருக்கா நான் போய் அவளை பார்த்துக்கிறேன் நீ பின்பக்கமா ஓடி வீடு போய் சேரு போ சீக்கிரமா போடா” என விரட்ட அதன்படி கொம்பனும் வேகமாக பின்னாடி பக்கம் சென்று ஓடியே காவேரியின் வீட்டை அடைந்தான்.
முன்பக்கமாக வந்த கொம்பனின் தாயோ காவேரியிடம்
”அடடே வாம்மா மருமகளே வா உள்ள வா எதுக்கு வெளிய நிக்கற”
”நான் வர்றது இருக்கட்டும் எங்க உங்க புள்ள அவரை அனுப்புங்க”
”யாரு கொம்பனா அவன் இங்க வரலையேம்மா”
”என்னது வரலையா”
”ஆமாம்”
”வீட்லயும் இல்லை தோப்புலயும் இல்லை இங்கயும் இல்லைன்னா என்ன அர்த்தம் வேற எங்க போயிருப்பான்”
”அவனுக்கு போக்கிடம் ஏது இங்க இல்லைன்னா உன் வீட்லதான் இருப்பான் அங்க போய்