”ம்”
”என் டவல் அவிழ்ந்துடுச்சி”
”சரி”
”அவள் என்னை முழுசா பார்த்துட்டா என்னோட மானமே போச்சி”
”ஓ அப்படியா எது ஓஹோ அப்படியா” என சந்தோஷப்பட
”சே நீயெல்லாம் என் நண்பனா என் மானம் போச்சிங்கறேன் நீ சந்தோஷப்படற”
”எங்க போச்சி எல்லாம் உன் பொண்டாட்டிக்கிட்டதானே விடு, அவள் பார்க்காம யார் பார்க்கப் போறா, எப்படியும் நீ பிரம்மசாரியாகப் போறதில்லை, கவலையை விட்டுட்டு காவேரியோட சேர்ந்து வாழற வழியைப் பாரு”
”போடா என்னால முடியாது, எனக்கு அவமானமா இருக்கு எந்த முகத்தை வைச்சிக்கிட்டு அவளை பார்க்கறது“
”எல்லாம் இருக்கற முகத்தை வைச்சி பாரு அவள் ஒண்ணும் நினைக்கமாட்டா”
”அதென்னடா அவள் என்னைக் கட்டிப்பிடிச்சா நான் ஒண்ணும் சொல்லலை நான் அவளை கட்டிப்பிடிக்க போனா அருவாளை வைக்கறா”
”அதானே ஏதோ இடிக்குது ஒருவேளை உன்னை அவள் வெறுப்பேத்தி அழவைக்கறாளோ”
”என்னடா சொல்ற”
”ஆமாம்டா நீ அவள் விசயத்தில பலவீனமாவேன்னு தெரியும் உன்னை வெறுபேத்தி பார்க்கனும்னு சீண்டறாள்ன்னு நினைக்கிறேன்”