பாரும்மா”
”இல்லையே நான் அங்க இருந்துதானே வந்தேன் உங்க புள்ளையை காப்பாத்த நினைக்காதீங்க அத்தை”
”அட என் மேல நம்பிக்கையில்லையா என்ன, வா உள்ள வந்து நீயே பாரு வா” என அழைக்க அவளோ அவசர அவசரமாக வீட்டிற்குள் சென்று ஒவ்வொரு இடமாக தேடிப்பார்த்து ஓய்ந்துப் போய்
”நான் போய் என் வீட்ல பார்க்கிறேன் அத்தை” என்றாள்
”இரும்மா என்ன விசயம் ஏதாவது பிரச்சனையா எதுக்கு அவனை தேடற”
”உங்க புள்ளை என் அனுமதியில்லாம என்கிட்ட தப்பா நடந்துக்கறாரு”
”அப்படியா அதுக்காக அவனுக்கு தண்டனை எதுவும் தராதம்மா சின்ன புள்ள கஷ்டப்படுவான்”
”பார்க்கலாம் பார்க்கலாம்” என சொல்லிக் கொண்டே அவள் செல்ல அவனின் தாயோ கலங்கினார் தன் மகனை நினைத்து
காவேரி தன் வீட்டிற்கு வர அங்கு சண்முகத்திடம் தஞ்சமடைந்திருந்தான் கொம்பன். அவன் இருப்பதைக்கண்டதும் நிம்மதியானாள் காவேரி
”எங்க போயிருந்த கொம்பா”
”நான் எங்கயும் போகலை மாமாகூடவே இருந்தேன்”
”பொய் சொல்லாத நீ உன் அம்மா வீட்டுக்குப் போகலை”
”இல்லையே நான் ஏன் அங்கப் போகப் போறேன் எனக்கே வீட்டு வேலைகள் நிறைய