இருக்கு அதை வேற நான் முடிக்கனும் நிக்கறதுக்கு நேரமில்லை” என சொல்லிக் கொண்டே செல்ல அவளோ குழம்பி தன் தந்தையிடம்
”அப்பா உண்மையை சொல்லுங்க கொம்பன் இவ்ளோ நேரம் இங்கயா இருந்தான்”
”ஆமாம்மா”
என சொல்ல அவளும் நம்பி கொம்பனை தேடிச் சென்றாள். அவனோ வேலையில் மூழ்கியிருக்க அவனை வேலை செய்ய விடாமல் தொல்லை செய்தாள். எப்படியாவது அவனிடம் இருந்து உண்மையை வரவழைக்க எண்ணினாள், அவனோ பிடிகொடுக்காமல் தப்பித்துக் கொண்டே இருந்தவன் ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி
”என்னடி வேணும் உனக்கு ஆமாம்டி நான் என் அம்மா வீட்டுக்குதான் போனேன் போதுமா”
”யாரை கேட்டு போன”
”என் இஷ்டம் நான் போவேன் வருவேன் யார்கிட்ட கேட்கனும்”
”என்னைக் கேட்கனும்”
”எதுக்கு கேட்கனும்”
”என் அனுமதியில்லாம நீ எதையும் செய்யக்கூடாது”
”அப்படித்தான் செய்வேன்”
”என்னையே எதிர்த்துப் பேசறியா மறுபடியும் சொல்றேன் என்னை மீறி நீ எதையும் செய்யக்கூடாது”
”செய்தா என்னடி செய்வ”