அவளின் பேச்சை ரசித்தான் கோபம் வரவில்லை, அதுவே அவனுக்கு வியப்பாக இருந்தது. அவனது கோபம் குறைந்தது, தொடர்ந்து வேலை செய்தான்.
மாலையில் வீடு திரும்பினாள் மாதவி இம்முறை கண்ணகி சமையல் செய்துக் கொண்டிருந்தாள்
”அடியேய் கண்ணகி” என கோபமாக வந்து அவளிடம் நின்றாள் மாதவி
”என்னடி கோபமா வந்திருக்க, என்ன விசயம் என்ன சொல்றாரு உன் கோவலன்”
”அடிப்பாவி நீ பாட்டுக்கு அவனை வெறுப்பேத்தி விடற, அவன் பாட்டுக்கு என்னை போட்டு தாளிக்கறான் தெரியுமா”
”சாரிடி நான் எதுவும் திட்டம் போட்டு செய்யலை அதுவா அமையுது“
”ஆமா அமையுது எனக்கு இங்க வயிறு எரியுது”
“சரி சரி என்னாச்சி ரொம்பவே உன்னை வெறுப்பேத்திட்டாரா”
”பின்ன தலைவலின்னு வந்து ஆடிட்டாப்ல அப்புறம் பாட்டுபாடி தலைவலியை போக்கினேன்”
”பாட்டா என்னடி இதெல்லாம் புதுசா இருக்கு”
”என்ன செய்றது, அந்தாளை எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலை, அந்தாளு வர்றதுக்கு முன்னாடி ஒரு பாட்டு கேட்டுக்கிட்டு ரசிச்சிக்கிட்டு இருந்தேன், சட்டுன்னு அது ஞாபகம் வரவும் அதையே பாடி வைச்சேன், எப்படியோ அந்தாளு தலைவலி போயிடுச்சி நான் வேலை பார்க்க போயிட்டேன்”
”ஓ அப்படியா”