”சரி நீ சொல்லு ஸ்ட்ரைக் என்னாச்சி” என கேட்க கண்ணகியோ சிரித்தபடியே நடந்ததைக் கூற
”ஓ அந்த தேவாங்கு அறிவால்லாம் பேசியிருக்கா பாரேன், பாவம்டி அவரு, வசமா உன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கறாரு போல”
”அப்படி சொல்ல முடியாது, அவருக்கு இந்த கம்பெனி பிசினெஸ் இதெல்லாம் நல்லா வருது ஆனா தாளாளர் வேலை அவருக்கு சுத்தமா வரலை, அவரை தப்புன்னு சொன்னா கோபம் வருது என்ன செய்றது”
”ஆக 2 மாசத்துக்கு காலேஜ்ல எந்தவொரு பிரச்சனையும் இருக்காது போல”
”அப்படி சொல்ல முடியாது மாதவி நாளைக்கு என்ன பிரச்சனை வரும்னு தெரியலை எதுக்கும் நான் தயாரா இருக்கனும், இப்போதைக்கு ஸ்ட்ரைக் நடக்காது ஆனா செமஸ்டர் எக்ஸாம் என்ன ஆகும்னு தெரியலை அதை நினைச்சாதான் கவலையா இருக்கு”
”இதுல உன்தப்பு எதுவும் இல்லை”
”முடிஞ்சவரைக்கும் எல்லா மாணவர்களையும் பார்டர் மார்க்காவது எடுக்க வைச்சி பாஸாக்கிடனும்”
”என்னடி சொல்ற”
”ஆமாம் மாதவி இதுநாள் வரை பாடமே நடத்தலை இனிமேல பாடம் நடத்தி அதை அவங்க படிச்சி எக்ஸாம் எழுதுவாங்களா சொல்லு”
”சந்தேகம்தான் பெயில் ஆக வாய்ப்புகள் இருக்கு“
”அப்படி நடந்தா மாணவர்கள் மத்தியில பிரச்சனை வரும் பெயில் ஆனவங்க நிலைமை ரொம்ப மோசமாயிடும் அதுக்கு அப்புறம் அவங்க படிக்க வரமாட்டாங்க”