”பேசாம கேள்விதாளை ஈசியா கொடு”
”அப்படித்தான் செய்யனும் மாதவி இதைப்பத்தி நான் முன்னாள் பிரின்சிபால்கிட்ட பேசப் போறேன்”
”எப்படியோ உன்னால எல்லா மாணவர்களும் ஆல் பாஸாக போறாங்க போல” என சொல்லி சிரிக்க அவளும் கலகலவென சிரித்தாள்.
மறுபக்கம் வீடு திரும்பிய கோவலனோ ஈஸ்வரமூர்த்தியை தேடிச் சென்று கல்லூரியில் நடந்ததை சொன்னான்
”இதுதான் நடந்தது தாத்தா”
”இந்த விசயம் எனக்கு எப்பவோ வந்து சேர்ந்துடுச்சி அதை ஏன் மூச்சுபிடிச்சி ஒப்பிக்கற”
”அதுக்கில்லை தாத்தா நீங்க அங்க இருந்திருக்கனும்”
”நான் மட்டும் அங்க இருந்திருந்தா எல்லார் முன்னாடியும் உன்னை திட்டியிருப்பேன்”
”நானா நான் என்ன தப்பு செய்தேன்”
”பின்ன பாடம் படிக்கற மாணவர்கள்கிட்ட எப்படி தப்பான புத்தகங்கள் இருக்குது”
”அது வந்து”
”இதுதான் நீ அவங்களுக்கு தந்த சுதந்திரமா”
”சாரி தாத்தா நான் என்னவோ நினைச்சேன் அது என்னவோ நடக்குது”