”உனக்கு பீஸா தரனும்ல அதை சொல்லி வாங்கிட்டு வந்தேன்”
”விசயத்தை சொல்லியுமா அவங்க பணத்தை தந்தாங்க”
”ஆமாம் இந்தா வாங்கிக்க உன்னோட பீஸை, இதப்பாரு நீ கத்துக்கொடுக்கற பாடத்தில காவேரி உடனே என்னை காதலிக்கனும்” என சொல்ல அவளோ நொந்துப் போனாள்.
”சரி சரி நைட்டு பாடம் எடுக்கறேன் இப்ப போ” என சொல்ல அவனும் சென்றான். காவேரி பலத்த சிந்தனையுடன் நேரத்தை ஓட்டினாள்.
இரவு நேரம் அனைவரும் உண்டு முடித்து அறையில் முடங்கிய நேரம் காவேரி வருவாள் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தான் கொம்பன், ஆனால் அவள் வராமல் போகவே அதிர்ந்து அவளை தேடி வந்தான், அவளோ அப்போதுதான் உறங்க ஆரம்பிக்க அவளை உலுக்கி எழுப்பினான்
”அறிவிருக்கா உனக்கு எதுக்கு இப்படி என்னை எழுப்பற” என திட்டினாள்
”உனக்கு அறிவிருக்கா கைநீட்டி பணத்தை வாங்கினியே மறந்துட்டியா”
”என்ன பணம்”
”ம் காதல் பாடம் எடுக்க பீஸ் கேட்டியே நான்கூட ஒரு லட்சம் ரூபா சுளையா கொடுத்தேனே மறந்துட்டியா”
”ஓ அதுவா அதுக்கா இப்ப என்னை எழுப்பற”
”நீதானே சொன்ன நைட் வரேன்னு நீ வரலை அதான் நான் வந்தேன் சரி சரி எனக்கு பாடம் எடு” என சொல்ல அவளோ நொந்துக் கொண்டே அவனைப் பார்த்தாள் அவனோ படுக்கையில் சட்டமாக அமர்ந்துக் கொண்டான்.