வகுப்புகளுக்குச் சென்றார்கள், இதற்கே கல்லூரி நேரம் முடிந்துவிட்டது அவரவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று கல்லூரியில் நடந்ததை சொல்ல அவர்களை பெற்றவர்கள் கண்ணகியின் முடிவை சரியென்றார்கள், 2 மாதங்கள்தானே பொறுத்துக் கொள்ளுமாறு தாய் தந்தையர்கள் ஆதரவாக சொல்லியபின்புதான் மாணவர்கள் மனம் இறங்கி வந்தார்கள், அதில் கண்ணகி தப்பித்தாள்.
மறுபக்கம் மாதவி மாட்டிக் கொண்டாள், மாலை நேரம் வேலை முடிந்ததும் வீட்டிற்கு அனைவரும் செல்ல மாதவியும் தனது ஸ்கூட்டியிடம் வந்த நேரம் கோவலனின் வண்டி சர்ரென அவள் முன் வந்து நின்றது, அதில் அவள் தடுமாறி தரையில் விழுந்துவிட்டாள் கோவலன் அதைக்கண்டு அவசரமாக கார் விட்டு இறங்கி வந்தவன்
”ஓ சாரி சாரி கமான் என் கையை பிடி” என சொல்ல அவளோ அவனது கையை பற்றிக் கொள்ள அவன் அவளை எழுப்பி நிற்க வைத்தான்
”என்ன இது இப்படியா வண்டியை முரட்டுத்தனமா ஓட்டிட்டு வர்றது ச்சே நீங்கதான் முரட்டுத்தனமா இருக்கீங்கன்னு பார்த்தா ஓட்டறதும் அப்படித்தானா, இப்படியிருந்தா எப்படி பொண்ணுங்களுக்கு பிடிக்கும்” என எரிந்து விழுந்தாள் அவளின் அந்த கோபப்பேச்சு கூட அவனுக்கு ரசிக்கும் விதமாகவே இருந்தது
”சாரி மாதவி எங்க நீ கிளம்பிப் போயிடுவியோன்னு பயந்து காரை ஓட்டி வந்தேன் சரி உள்ள வா”
“எதுக்கு நான் வீட்டுக்குப் போகனும்”
”ப்ச் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்”
”ஆபிஸ் டைம் முடிஞ்சிடுச்சி, இதுக்கு மேல என்ன பேசறது போதும் நாளைக்கு பேசிக்கலாம்”
”ப்ளீஸ் மாதவி”
“இதப்பாருங்க எனக்கு வெளிய நிறயை வேலைகள் இருக்கு, ஷாப்பிங் போகனும் ப்ளீஸ்