என்னை விடுங்க கோவலன்”
”ஓ ஷாப்பிங்கா கமான் நானும் வரேன்”
”நீங்களா” என அவள் கேட்பதற்குள் அவளின் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தான் அவளோ அதிர்ந்தாள்
”கோவலன்”
“பின்னாடி உட்காரு நான் வண்டி ஓட்டறேன்”
”நீங்களா அய்யோ வேணாம், நீங்க காரையே முரட்டுத்தனமா ஓட்டறீங்க நான் என் ஸ்கூட்டியை குழந்தை போல பார்த்துக்கிறேன், அதை நீங்க முரட்டுத்தனமா கையாண்டா அது அழுதுடும்” என்றாள் அப்பாவியாக
அதைக்கேட்டு அவனுக்கு சிரிப்பே வந்தது, உடனே வண்டியை விட்டு இறங்கி நின்றான் அதில் அவளும் வண்டியில் ஏறிக் கொள்ள உடனே பின்பக்க சீட்டில் அமர அவள் அரண்டாள்
”அய்யோ கோவலன் என்ன செய்றீங்க, இறங்குங்க யாராவது உங்களையும் என்னையும் சேர்த்து வைச்சிப் பார்த்தா தப்பாயிடும்” என சொல்ல அவனோ இறங்க மறுக்க அவளோ தனது கோபத்தை விடுத்து
”நான் எங்கயும் போகலை இறங்குங்க” என சொல்ல அவனும் இறங்கினான் அவளும் இறங்கினாள்
”வாங்க உள்ள போய் நிதானமா பேசலாம் ம் வாங்க” என அவனை அன்போடு அழைக்க அந்த அன்பு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது அவளுடன் இணைந்து தன் ஆபிஸ் அறைக்குச் சென்றான் அவள் எடுத்த உடனே
”இப்ப சொல்லுங்க காலேஜ்ல என்ன பிரச்சனை” என கேட்க அவன் வியந்தான்