”எப்படி கண்டுபிடிச்ச”
”இதுல கண்டுபிடிக்க என்ன இருக்கு, தினமும் அங்க ஏதாவது நடந்தா உங்களுக்கு மூடு மாறிடுது கோபப்படறீங்க”
”கோபம் வர்ற மாதிரி நடந்துக்கிட்டா என்ன செய்றது சொல்லு” என கேட்க மாதவி யோசித்தாள்
”கண்ணகி என்ன செய்தாள்ன்னு தெரியலையே நல்லா வருவடி நீ நல்லா வருவ” என மனதில் நினைத்துக் கொண்டே அவனிடம்
”சரி நான் ஒண்ணு கேட்கறேன் பதில் சொல்லுங்க”
”என்னது“
”காலேஜ்ல நடந்த பிரச்சனை மாணவர்களுக்கு எதிரானதா இல்லை அவங்க நல்லதுக்கா” என கேட்க அவன் நிதானித்து
”ம் புரியுது புரியுது”
”புரிஞ்சிடுச்சா சந்தோஷம் இப்ப உங்க கோபம் தணிஞ்சிருக்குமே”
”அது தெரியலை ஆனா உன்கூட இருக்கறப்ப நான் நிம்மதியை உணர்றேன்”
”ம்க்கும் உன்னால என் நிம்மதி பறிப்போகுது” என மனதில் நினைத்தவள் அவனிடம்
”கோவலன்”
”ம்”