அவளைக்கண்டதும்
”என் ரூமுக்கு வா” என கத்திவிட்டு சென்றான்.
”போச்சிடா என்னத்த செய்து வைச்சாளோ இப்படி கோபத்தோட வராப்லயே நான் என்ன செய்வேன்” என புலம்பிக் கொண்டே அவனது அறைக்குச் செல்லும் முன்
”உள்ளே வரலாமா” என அனுமதி கேட்க அவனோ வியந்து
”வா” என்றான் அவளும் உள்ளே நுழைந்ததும்
”எதுக்காக அனுமதி கேட்டு உள்ள வர்ற”
”அதுதானே மேனர்ஸ்ங்கறது, நீங்க ரூமுக்குள்ள எப்படியிருப்பீங்களோ, முன்னபின்ன நீங்க இருந்து நான் பாட்டுக்கு உள்ள வந்தா அப்புறம் உங்களுக்கும் சங்கடம் எனக்கும் சங்கடம்லயா” என சொல்ல அவனோ நொந்துப் போனான்.
”தப்பு பண்ணிட்டேன் மாதவி” என வருத்தமாகச் சொல்ல அவளோ அவனை சமாதானப்படுத்தும் நோக்கில்
”சே சே உங்களால தப்பு செய்ய முடியாது, தெரியாம ஏதாவது செய்திருப்பீங்க அது தப்பாயிருக்கும் அவ்ளோதான்” என்றாள் அதைக்கேட்டவன் முகம் மலர்ந்தது
”பார்த்தியா உனக்கு இது புரியுது, ஆனா அவளுக்கு புரியலையே தாம்தூம்னு குதிக்கறா”
”யாரை சொல்றீங்க”
”அதான் அவள்”
”யாரு”