(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 12 - சசிரேகா

றுநாள் காலையில் காவேரி நேற்று நடந்ததை மனதில் வைத்துக் கொண்டு வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களை அவர்களின் சம்பளத்தை தந்து வேலையை விட்டு அனுப்பினாள், அவர்களுக்கோ இருந்த வேலை போனதே என எண்ணி வருத்தமுடன் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்

  

அவர்களின் வீட்டில் விசயத்தை கூற அவர்களுக்கு வேலை பறிபோனது கூட பெரிதாக தெரியவில்லை, ஊருக்கே நன்மை செய்த கொம்பன் இனி அந்த வீட்டில் வேலையாள் வேலை கூட செய்வானா, அய்யோ பாவம் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள், அந்த செய்தி எப்படியோ கொம்பனின் பெற்றோர்க்கும் சென்று சேர்ந்தது

  

ஏற்கனவே மன உளைச்சலில் இருந்தவர்கள் இந்த செய்தியைக் கேட்டதும் இன்னும் மன வருத்தம் கொண்டார்கள், கொம்பனின் நிலைமை இனி என்னாகுமே என கவலைக்கொண்டார்கள், வேறென்ன அவர்களால் செய்ய முடியும், ஆளுக்கொரு மூலையில் அமர்ந்துக் கொண்டு புலம்பிக் கொண்டார்கள்.

  

கொம்பனோ காலையில் எழுந்து வந்து பார்த்தான், எந்த வேலையும் நடக்கவில்லை, ஒரு வேலைக்காரனும் இல்லை அவனுக்கே குழப்பமாக இருந்தது, கணக்குப்பிள்ளையோ வீடு முழுக்க முன்னும் பின்னும் என அனைத்து இடத்திலும் வேலையாட்களை தேடினான், ஒருவரும் அகப்படாமல் போகவே பலத்த யோசனையுடன் வர அங்கு காவேரி ஹால் நடுவில் மாட்டியிருந்த ஊஞ்சலில் அமைதியாக ஆடிக் கொண்டிருந்தாள்.

  

அவளின் அமைதி கணக்குபிள்ளைக்கு சந்தேகமாக இருந்தது, எதற்கும் இருக்கட்டுமென சண்முகத்திடம் விசாரிக்க அவருக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை  என சொல்ல உடனே ஒரு வேலைக்காரனின் வீட்டிற்குச் சென்று என்ன நடந்தது என விசாரித்து தெரிந்துக் கொண்டு வீடு வந்தான் கணக்குபிள்ளை. ஆக காவேரிதான் இதற்கு காரணம் என புரிந்துக் கொண்டு அதை கொம்பனிடம் சொல்ல கொம்பனுக்கு கோபமே எழுந்தது.

  

நேராக அவளிடம் சென்று கோபத்தில் வெடித்தான்

  

”உன்னோட பழிவாங்கற எண்ணத்திற்கு அளவேயில்லையா, எதுக்காக வீட்டு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.