(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

வேலைக்காரங்களை வேலையை விட்டு அனுப்பின என்ன உன்னோட உத்தேசம்” என கேட்க அதற்கு காவேரி சிறிதும் பயப்படாமல்

  

”எதுக்கு கத்தற இது என் வீடு, இங்க இதுபோல காட்டுத்தனமா சத்தம் போடக்கூடாது, புரியுதா எதுவாயிருந்தாலும் நிதானமா மெதுவா பேசு, நான் என்ன 500 கி.மீ தள்ளியா இருக்கேன், உன் முன்னாடிதானே இருக்கேன், குரலை உயர்த்தி பேசின உனக்குதான் நஷ்டம் ஜாக்கிரதை” என அவள் மெதுவாக பேசி மிரட்டவும் அவனோ கோபத்தில் உள்ளுக்குள் பொங்கினாலும் மெதுவாக அதை அடக்கிக் கொண்டு

  

”எதுக்காக வேலைக்காரங்களை வேலையை விட்டு எடுத்த”

  

”உனக்கு யார் உரிமை தந்தது என்னையே கேள்வி கேட்கறதுக்கு”

  

”நான் உன் புருஷன்“

  

”அதனால நீ என்னை கேள்விக் கேட்கனுமா, மரியாதையா என்னை நடத்தினா நானும் உனக்கு மரியாதை தருவேன் இல்லைன்னு வையேன்”

  

”சரிம்மா இப்ப வீட்டு வேலைகள் போட்டது போட்டபடி இருக்கே இதையெல்லாம் யார் செய்வா அதுக்காவது பதில் சொல்லு”

  

”வேலைகள் நிக்குதுன்னா ஏன் வேடிக்கைப் பார்க்கறீங்க இறங்கி செய்ய வேண்டியதுதானே”

  

”எது நானா“

  

”பின்ன நீங்கதானே வீட்டு வேலைகளை பார்த்துக்கற பொறுப்புகளை எடுத்துக்கிட்டீங்க வேலைக்காரங்களை வைச்சி வேலை வாங்க எனக்குத் தெரியாதா என்ன”

  

”ஓஹோ என்னை பழிவாங்க ஒரு புது வழியை கண்டுபிடிச்சிட்ட போல“

  

”ஆமாம்”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.