”என்னை வேலைக்காரனாக்கிட்டல்ல”
”ப்ச் அதை ஏன் தப்பா புரிஞ்சிக்கறீங்க, இது நம்ம வீடுன்னு நினைச்சிக்குங்க, நம்ம வீட்டு வேலைகளை செய்றது ஒண்ணும் பெரிய தப்பு கிடையாது, இப்போ நான் உங்க வீட்டுக்கு மருமகளா வந்த பின்னாடி வீட்டு வேலைகளை செய்றேன்னு வைங்க அப்ப நான் என்ன வேலைக்காரின்னு சண்டைக்கு நிக்க முடியுமா சொல்லுங்க”
”நல்லா பேசக்கத்துக்கிட்ட காவேரி”
”கொம்பனோட மனைவியாச்சே இந்தளவுக்கு பேச்சு இல்லைன்னா ஏச்சுப்புடுவாங்க”
”ஆமா உன்னை எல்லாம் ஏய்க்கறாங்க அந்தளவுக்கு தில்லு இந்த ஊர்ல எவனுக்கு இருக்கு”
”உனக்கு இருக்கே நயமா பேசி என்னை ஏமாத்தற வழியெல்லாம் உனக்கு நல்லா வருதே“
”நேத்து நடந்ததை மனசுல வைச்சிக்கிட்டு இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க சரிம்மா சரி இப்ப என்ன நான் இந்த வீட்டு வேலைகளை செய்யனும் அதானே”
”அதேதான் உங்க வீடு என் வீடுன்னு பிரிச்சிப் பார்க்காம நம்ம வீடுன்னு நினைச்சி சந்தோஷமா எல்லா வேலைகளையும் செய்ங்க போங்க” என சொல்ல கொம்பனோ
”வீட்டோட மாப்பிள்ளையா வந்தவனை கடைசியில வீட்டு வேலைக்காரனாக்கிட்டீங்கள்ல” என கோபத்தில் கர்ஜிக்க
”பின்ன எந்த வேலையும் செய்யாம நீ பொழுதுக்கும் சும்மா வெட்டியாதானே இருக்க இப்படியிருக்கறதாலயே கண்டபடி யோசிச்சி தப்புத் தப்பா திட்டம் போட்டு அதுல சொதப்பல் வேற வாங்கிக்கற தேவையா உனக்கு”
”தேவைதான் எனக்கு எனக்கு இதுவும் வேணும் இதுக்கும் மேலயும் வேணும்”