(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”சந்திச்சப்ப என்ன நடந்தது“

  

”சொன்னா நீ வருத்தப்படுவ”

  

”அதெல்லாம் படமாட்டேன் நீ சொல்லு” என கேட்க மஹதியும் நடந்ததைச் சொன்னாள். அதைக்கேட்டு ஜானகி ஒரு சதவிதம் கூட நம்பவில்லை

  

”போதும்டி உன்னோட நாடகம்” என்றாள்

  

”என்னது நாடகமா இல்லை ஜானு நான் உண்மையைதான் சொல்றேன்”

  

”எப்படியாவது என் மனசை மாத்தனும்னு பொய்யா நீ ஒரு கதையை சொல்லுவ, அதை கேட்டு நான் மூர்த்தியை வெறுத்துட்டு வேங்கையன் கிட்ட போவேன்னு நினைச்சியா அது என்னிக்குமே நடக்காது”

  

”இல்லை ஜானு நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட உண்மையில நடந்தது இதுதான், அதுக்கு பின்னாடிதான் நான் உனக்கு மூர்த்தியை விட வேங்கையன்தான் பெஸ்ட்ன்னு நிரூபிக்க நினைச்சி நாடகம் அது இதுன்னு இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சேன், என்னால முடிஞ்சவரைக்கும் உன் மனசை மாத்த முயற்சி செய்தும் நீ மாறலை அதான் நடந்த உண்மையை சொன்னேன்”

  

”இதப்பாரு மஹதி, நான் ரொம்ப தெளிவா இருக்கேன், என்னோட காதல் உன்னைப் போல நேத்து வந்தது இல்லை, சின்னப்ப இருந்தே நான் மூர்த்தி மாமாவை விரும்ப ஆரம்பிச்சிட்டேன், அவர்கிட்ட ஆயிரம் குறைகள் இருந்தாலும் அதை சந்தோஷமா ஏத்துக்குவேன், அந்த வீட்ல ஆயிரம் கஷ்டம் வந்தாலும் சமாளிச்சிக்குவேன்”

  

”இவ்ளோ சொல்லியும் நீ கேட்கலைன்னா இனி உன் தலையெழுத்தை யாராலயும் மாத்த முடியாது, நானாவது வேங்கையன் மனசுல இடம்பிடிக்கற வழியைப் பாரக்கிறேன், இதோட என் நாடகம் முடிஞ்சது” என்றாள் அதைக்கேட்டு ஜானகி வருந்தவில்லை, மஹதியும்

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.