அங்கிருந்து கிளம்பி செல்லும் முன் திரும்பி ஜானகியைப் பார்த்து
”நிஜமாவே உனக்கு வேங்கையன் வேணாமா” என கேட்க அவளோ
”வேணாம் வேணாம் வேணாம்“ என அலறினாள்
”அப்போ நான் அவரை காதலிக்கட்டுமா”
“தாராளமா என்னவோ செய் இனி நட்பு அது இதுன்னு என்கிட்ட வந்துடாத”
”ஏன் இப்படி பேசற நான் உனக்கு துரோகம் இழைக்க வரலை“
”நான் அதுக்கு சொல்லலை நீ அது இதுன்னு பேசி என் மனசை மாத்த முயற்சி செய்யக்கூடாது, அதுக்குதான் அப்படி சொன்னேன் நீ இந்த வீட்டுக்கு சின்ன மருமகளாவே இரு, என் தோழியா எப்பவும் நீ இருக்க வேணாம், இதுவரைக்கும் நமக்குள்ள இருந்த நட்பு இன்னியோட முறிஞ்சது, நான் மூர்த்திகிட்ட போறேன், நீ வேங்கையன்கிட்ட போ” என தீர்த்துச் சொல்லிவிட மஹதிக்கு ஒரு மாதிரியாகிப் போனது, அவள் அங்கிருந்து சென்றபின் ஜானகி மகிழ்வுடன் உறங்கலானாள்.
மஹதியோ தன் அறைக்கு சென்றவள் உறக்கம் வராமல் தவித்தாள், ஜானகியின் பேச்சு அவளை பாடாய்படுத்தியது இரவு முழுவதும் உறங்காமல் இருந்தவள் விடிகாலை பொழுதில் வேங்கையனது அறைக்குச் சென்றாள், அங்கு அவன் உறங்கிக் கொண்டிருக்க அவன் பக்கத்தில் அமர்ந்து அவனை எழுப்பினாள் அவனும் உறக்கம் கலைந்து எழுந்தான்
”என்ன இங்க வந்திருக்க என்ன விசயம்” என கேட்க மஹதி சற்றும் யோசிக்காமல் அவனிடம்
”ஐ லவ் யூ” என்றாள் அதைக்கேட்டு அவன் அசரவில்லை
”இப்ப எதுக்கு நடிக்கற யாராவது வெளிய இருக்காங்களா” என மெதுவாக கேட்க அவளோ சட்டென அவனை கட்டிப்பிடித்து