”டேய் முதல்ல இந்த நாய்களை விரட்டு முன்னாடியே சொன்னோம் இதுகளால உனக்கு ஆபத்து வரும்னு அப்ப கேட்டியா நீ இப்ப பாரு என்னாச்சின்னு”
”அப்பா எதுவும் தெரிஞ்சிக்காம பேசாதீங்க நாய்ங்ககிட்டயிருந்து காவேரியை காப்பாத்தலாம்னு நினைச்சப்ப அதுங்க என்னை கடிச்சிடுச்சி“
”நீதானே நாய்களை வைச்சி என் மருமகளை விரட்டப்பார்த்த”
”அப்படியெல்லாம் இல்லை”
”பின்ன நீ செய்றதுக்கு என்னடா அர்த்தம் யாராவது நாய்களை படுக்கையறைக்கு கொண்டு வருவாங்களா என்ன”
”இல்லைம்மா அது வந்து“
”பேசாதடா முதல்ல இந்த நாய்களை கூட்டிட்டுப் போ, இன்னொரு முறை இதுகளை நான் பார்த்தேன் பொல்லாதவளாயிடுவேன் இது என்ன வீடுன்னு நினைச்சியா இல்லை நாய்கள் வளர்ற இடம்னு நினைச்சியா”
”சரி சரி இப்பவே இதுகளை அனுப்பிடறேன்” என சொல்லிவிட்டு அந்த நாய்களை அழைத்துக் கொண்டு கணக்குபிள்ளையுடன் வெளியேறிச் செல்ல அவன் சென்றதும்தான் தாமதம் காவேரி ஓடிச் சென்று கொம்பனின் தாயை அணைத்துக் கொண்டாள் பயத்தில்.
அவளின் பயத்தை புரிந்துக் கொண்டவர்
”நீ கவலைப்படாதம்மா நாங்க இருக்கோம் உனக்கு துணையா, கொம்பனால உனக்கு எந்த ஆபத்தும் வராத மாதிரி நாங்க பார்த்துக்கறோம் எங்களை நம்பும்மா” என சொல்ல அவளும் சரிசரியென தலையாட்டினாள்