மிகவும் பயந்திருந்தாள் ஆனாலும் உள்ளுக்குள் கொம்பன் மட்டும் வரலைன்னா அந்த நாய்ங்க நம்மளை கடிச்சிருக்குமே என எண்ணி மனதுள் கொம்பனுக்கு நன்றி கூறிக கொண்டாள் அன்றைய இரவு காவேரி தன் மாமியார் உடனே உறஙகிப் போனாள்.
மறுபக்கம் ஆஸ்பிட்டல் சென்று வந்த கொம்பனோ கணக்குபிள்ளையிடம்
”நாய்ங்க எங்க”
”வேற எங்க இருக்கும் நீ எங்கிருந்து அழைச்சிட்டு வந்தியோ அங்கயே விட்டு வந்தேன் ஏன்டா கொம்பா உனக்கு எதுக்கு இந்த வேலை பார்த்தியா உனக்கு என்ன நடந்திச்சின்னு”
”நாய்களை வைச்சி அவளை பயமுறுத்தி அடிபணிய வைக்கலாம்னு ஆசைப்பட்டேன்”
”உன் ஆசையில மண்ணு விழ ஆமா அவளை அடிபணிய வைக்கறேன்னு சொல்லிட்டு எதுக்காக நீ அவளை காப்பாத்தின விட்டுட வேண்டியதுதானே”
”அதெப்படி அவள் என் பொண்டாட்டியாச்சே”
”சந்தோஷம் இந்த நினைப்பு வேற மனசுல வைச்சிருக்கியா பின்ன எதுக்குடா இந்த வேலை உனக்கு”
”அவளை ஒரு முறையாவது ஜெயிக்கலாம்னுதான்”
”அவள் என்ன உன் விரோதியா உன் பொண்டாட்டிதானே அவள்கிட்ட தோக்கறதில உனக்கென்ன மானப்பிரச்சனை வந்துடப்போகுது“
”தோக்கறதுல பிரச்சனையில்லை ஆனா அவள் என்னை ரொம்ப அவமானப்படுத்திட்டா நான் எப்படி அவள்கிட்ட மன்னிப்பு கேட்டேனோ அதே போல அவளும் என்கிட்ட மன்னிப்பு கேட்கனும்ல ஆனா கேட்கலையே”