(Reading time: 27 - 53 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

பழிவாங்கியே தீருவேன்டி”

  

”நானும்தான்” என காவேரி சொல்ல கோபத்துடன் வெளியேறினான் கொம்பன்.

  

அவன் அப்போது சென்று இரவு நேரம்தான் வீட்டிற்கு வந்தான், வரும் போதே அவன் வளர்த்த நாய்களில் இருந்து முரட்டு நாய்களாக ஒரு பத்து நாய்களை வீட்டிற்கே அழைத்து வந்தான். அவைகளைக்கண்டதும் அரண்டுப் போனாள் காவேரி. கொம்பனின் பெற்றோரோ அவனை அதட்டினார்கள்

  

”டேய் என்னடா இது இங்க எதுக்கு நாய்களை கூட்டிட்டு வந்த”

  

”ம் சும்மாதான்மா” என சொல்லியவன் நேராக அவைகளை தனது படுக்கையறைக்கு அழைத்துச் செல்ல விக்கித்துப் போனாள் காவேரி.

  

கொம்பனின் பெற்றோருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் நொந்துப் போக காவேரியோ மெல்ல அறைக்குள் எட்டிப்பார்த்தாள். அறை முழுக்க நாய்கள்தான் படுக்கையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் கொம்பன் காவேரியைப் பார்த்து நக்கலாக சிரித்து

  

”எங்க வீடு பெரிசுதான், ரூம்களும் நிறைய இருக்கு ஆனா என்ன செய்றது பாவம் உனக்கு எந்த ரூமும் கிடையாது, நான் மத்த ரூம்களை பூட்டிட்டேன் இருக்கறது இந்த ரூம்தான் நான் இருக்கேன், கூடவே நாய்களும் இருக்கு, எங்களோட சேர்ந்து உன்னால தங்க முடியுமா சே சே உன்னால முடியாது, அதனால என்ன செய்ற வெளிய போய் படுத்துக்க போ போ” என சொல்ல அவளோ தயங்கினாள்

  

”இப்ப நாம வெளிய போய் படுத்தா அவன் ஜெயிச்சதா அர்த்தம், கூடாதே என்ன செய்யலாம்” என நினைத்தபடியே அந்த நாய்களை பார்த்தாள்.

  

அவைகளோ காவேரியைப் பார்த்து முறைத்தது, அனைத்தும் வெறியுடன் இருப்பதைக்கண்ட காவேரிக்கு உள்ளுக்குள் பயம் இருந்தாலும் மெதுவாக கால் எடுத்து உள்ளே வர நாய் ஒன்று உருமியது, அந்த சத்தம் அவளின் அடிவயிற்றை கலக்கிவிட்டது ஆனாலும் பின்செல்லாமல் முன்னோக்கி வந்தாள், அவள் வருவதைக்கண்டு கொம்பன்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.