(Reading time: 27 - 53 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

மறுபக்கம் வீடு திரும்பிய கொம்பனோ நாய்கடியால் ஏற்பட்ட வலியால் அய்யோ அம்மா என முனகிக் கொண்டே தன் தாயை அழைக்க அவரும் வந்தார் மகனின் இந்த நிலைமையைக்கண்டு பரிதாபப்பட்டு கலங்கினார்.

  

அவனது தந்தையும் முதலில் வருந்தி பின் அவனையே திட்ட அவனும் அவரின் திட்டுக்களை கேட்டுவிட்டு தன் அறைக்குச் சென்றான், அங்கு காவேரி உறங்கிக் கொண்டிருக்க அவள் பக்கத்தில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவன் வந்த அரவத்தில் உறக்கம் கலைந்து எழுந்த காவேரியோ கொம்பனின் நிலைமையைக்கண்டு உள்ளுக்குள் இரக்கப்பட்டாலும் வெளியே அதை காட்டிக் கொள்ளாமல் கலகலவென சிரித்து

  

”அடுத்தவங்களுக்கு கெடுதல் நினைச்சா இப்படிதான் நடக்கும்” என்றாள் அதைக்கேட்டு

  

”உண்மைதான் காவேரி தன்வினை தன்னை சுடும்” என்றான்

  

”தேவையா உனக்கு இது” என கேட்க அவனோ வலியிலும் மென்மையாக புன்னகை புரிந்தான்.

  

அவனை போலவே மென்மையாக புன்னகை பூத்தவள் அவனிடம்

  

”நன்றி” என்றாள்

  

”நன்றியா எதுக்கு”

  

”என்னை நாய்கள்கிட்ட இருந்து காப்பாத்தினதுக்கு”

  

”நான்தானே உன்னை பயமுறுத்த நாய்களை கூட்டி வந்தேன்”

  

”இருந்தாலும் கடைசி நேரத்தில மனிதாபிமானத்தோட யோசிச்சி என்னை காப்பாத்தினியே அதுக்கு நன்றி”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.