(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”மாமா நீதான் எனக்கு எல்லாமே, என் உசுரே நீதானே, என்னை ஏத்துக்குங்க மாமா” என கெஞ்ச மனம் இரங்கவில்லை மூர்த்தி

  

அவளை தள்ளிவிட சரியாக அவள் வேங்கையனின் காலில் விழுந்தாள் தடுமாறி, அவ்வளவுதான் வேங்கையனுக்கு வந்ததே கோபம் சட்டென மூர்த்தியை பிடித்து உலுக்கி அடிக்க வர அப்போதும் தடுத்தாள் ஜானகி

  

”அவர் மேல உன் கை பட்டிச்சி அவ்ளோதான் நான் என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது தள்ளிப் போ” என கத்த அதில் வேங்கையன் கலக்கத்துடன் விலகி நின்று

  

”ஜானகி அவன் உன்னை மதிக்கலை உன்னை அவன் ஏத்துக்க மாட்டான்“

  

“அடச்சீ நிறுத்து நான் மூர்த்தியை விரும்பறேன்னு நல்லா தெரிஞ்சும் என்னை அடையப் பார்க்கிறியே நீயெல்லாம் ஒரு மனுஷனா” என திட்ட அவனோ அதிர்ந்து

  

”ஜானகி நான் உன்னோட புருஷன்”

  

”அந்த உறவே வேணாம்னு என்னிக்கோ நான் கோர்ட் படி ஏறினேனே மறந்துட்டியா, அன்னிக்கே டைவர்ஸ் கிடைச்சிருந்தா என் வாழ்க்கை சுகப்பட்டிருக்கும், இப்ப உன்னால என் மூர்த்தி மாமா என்னை விட்டு விலகறாரு, இப்ப உனக்கு சந்தோஷமா என்ன வேணும் உனக்கு, நான் வேணுமா இந்தா எடுத்துக்க, ஆனா உன்னால என்னிக்குமே என் மனசுல இடம் பிடிக்க முடியாது” என பொங்கி எழ வேங்கையன் அப்போதுதான் உண்மையை உணர்ந்தான்.

  

அந்நேரம் அவனுக்கு ஜானகி மனைவியாக தெரியவில்லை வேறு பெண்ணாக தெரிந்தாள், சட்டென அவளை விட்டு விலகி நின்றான், ஜானகியோ மூர்த்தியிடம்

  

”மாமா என்னாச்சி மாமா வலிக்குதா மாமா” என அக்கறைப்பட மூர்த்தியோ அவளை தள்ளிவிட்டான். ஆனால் அவள் பிடிவாதமாக இருக்க வேங்கையன் அதைப் பார்த்து நொந்து அங்கிருந்து வெளியேறி செல்ல முயல வீரசிங்கம் தடுத்தார்

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.