முகம் மலர்ந்தார், மஹதி அதிர்ந்தாள், வேங்கையனோ தீயில் சுட்டது போல துடித்தபடி தன் தந்தையைப் பார்த்தான்
இப்போது அவன் கண்ணில் கண்ணீர் இல்லை மாறாக அதிர்ச்சிதான் இருந்தது, இதைக்கேட்ட குபேரனும் வேணியும் கூட நிம்மதியானார்கள், ஜானகிக்கு கூட பெரும் சுமை இறக்கிவிட்ட சந்தோஷத்தில் உற்சாகமானாள். ஆனால் மூர்த்தியோ கொந்தளித்தான்
”என்ன விளையாடறீங்களா இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன், எனக்கு ஜானகி வேணாம் மஹதிதான் வேணும்” என சொல்லிவிட அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தார்கள்.
வீரசிங்கம் கூட இதை எதிர்பார்க்கவில்லை அதிர்ச்சியில் அவர் திக்குமுக்காடிப் போனார். ஜானகிக்கு கூட இது பெரிய அதிர்வுதான் அவளோ மூர்த்தியிடம்
”மாமா தானா நம்ம வாழ்க்கை கைகூடி வரும் போது எதுக்கு இப்ப மஹதி வேணும்னு சொல்றீங்க, அவள் வேணாம் மாமா அவள் ஒரு நம்பிக்கை துரோகி அவள் வேணாம் மாமா” என சொல்ல மூர்த்தியோ ஜானகியிடம்
”கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு, நான் சொல்றது விளங்கலையா உனக்கு, எனக்கு நீ வேணாம் மஹதிதான் வேணும், அவளை நான் கல்யாணம் செய்துக்க போறேன்” என சொல்ல தலையில் இடிவிழுந்தது போல சிலையென நின்றாள் ஜானகி.
மஹதியோ மூர்த்தியின் எண்ணத்தைப் புரிந்துக் கொண்டு சட்டென மங்களத்தின் பக்கம் சென்று நின்றுக் கொள்ள மங்களம் சற்றும் யோசிக்காமல் தன் கணவரிடம்
”என்னங்க நானும் சின்ன மருமகளும் கோயிலுக்கு போய்ட்டு வரோம் நீங்க இருந்து இந்த பஞ்சாயத்தை முடிங்க” என சொல்லிவிட்டு மஹதியைப் பார்த்து
”வாம்மா கோயிலுக்கு போய் வரலாம்“
”ஆனா அத்தை இங்க”