”உங்க முகம் வாடியிருக்கே உடம்பு சரியில்லையா சார்”
”ஆமாம்“
”நீங்க ஓய்வு எடுக்கலாமே”
”ஓய்வு எடுக்கம்னுதான் நான் போன பின்னாடி இந்த இடத்துக்கு யார் வருவா”
”அதான் உங்க பேரன் இருக்காரே”
”அவனா”
”ஆமாம் ஏன் அவர் மேல நம்பிக்கை வரலையா, அவர் மேல தப்பில்லை சிலம்பரசன் செஞ்ச தப்புக்கு இன்னுமா அவரை தண்டிக்கறீங்க”
”அவனால உன்னை காப்பாத்த முடியாம போச்சே”
”ஆனா அதுக்காக அவர் அமைதியா எனக்கென்ன வந்ததுன்னு நினைக்கலையே என்னை காப்பாத்த முயற்சி செய்தாரே சார் அதுவே பெரிசு”
”நீ அவனைப் பத்தி நல்லவிதமா பேசற ஆனா அவன் உன்னை பத்தி பேசினாலே கோபப்படறான்” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்து
”சிலருக்கு சிலரை பிடிக்காது அதுக்கு காரணமும் இருக்காது மனசுதான் காரணம் சார்”
”சரிம்மா இப்ப உன்னைப் பத்தி பேசலாமா”
”என்னைப் பத்தியா”
”ஆமாம் உன் எதிர்காலத்தை பத்தி என்ன முடிவு எடுத்து வைச்சிருக்க”