(Reading time: 23 - 45 minutes)
Chinna marumagal
Chinna marumagal

தொடர்கதை - சின்ன மருமகள் - 09 - சசிரேகா

ப்படியோ இந்த விசயம் கோயிலில் அமர்ந்திருந்த மங்களத்தின் காதில் விழுந்தது, அதைக்கேட்ட மஹதி துடித்துப் போனாள்.

  

”எல்லாம் என்னாலதான்” என வருத்தமாகச் சொல்ல அவரோ

  

”நீ காரணம் இல்லை, எல்லாமே விதிபடி நடக்குது, சரி வா நம்ம வீட்டுக்குப் போகலாம்”

  

”ஆனா அத்தை நான் எப்படி அங்க, பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க, என்னாலதான் ஜானகி போயிட்டதா நினைப்பாங்களே“

  

”நினைச்சா நினைக்கட்டும் யார் என்ன நினைச்சாலும் எனக்கு கவலையில்லை, என் புருஷன் சொன்னதை மறந்துட்டியா, நீ எங்க வீட்டு சின்ன மருமகள், கூடிய சீக்கிரம் உனக்கும் வேங்கையனுக்கும் கல்யாணம் செய்யப் போறேன்“

  

”இதுக்கு அவர் ஒத்துக்க மாட்டாரு, எனக்கும் குற்ற உணர்ச்சியா இருக்கு, எந்த முகத்தை வைச்சிக்கிட்டு அவர் முன்னாடி நான் நிக்கறது”

  

”இங்க பாரும்மா நீ முதல்ல எங்க வீட்டுக்கு வா, கொஞ்ச நாள் என் புள்ளை கவலையோட திரிவான், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சமாதானமாவான், அவன் சம்மதத்தோடவே உனக்கும் அவனுக்கும் கல்யாணம் செய்து வைக்கிறேன் இது சத்தியம்”

  

”அவசரப்படாதீங்க அத்தை காலம் எல்லாத்தையும் மாத்தும் பாருங்க, ஜானகி செய்ததை” என அவள் முடிக்கும் முன்பே

  

”அவள் கண்டிப்பா இதை செய்வாள்ன்னு தெரிஞ்சிதானே அவசர அவசரமா நான் உன்னை கூட்டிட்டுக்கிட்டு இங்க வந்தேன், சொன்னா புரிஞ்சிக்கம்மா கிளம்பு வா நம்ம வீட்டுக்குப் போகலாம் வா“

  

”ஆனா அத்தை”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.