(Reading time: 23 - 45 minutes)
Chinna marumagal
Chinna marumagal

கிடையாது, பொண்ணுங்க வந்தாலே தள்ளி நிப்பான், ஜானகியை அவனுக்கு சின்னப்ப இருந்தே பிடிக்கும், அவள்கூட இருந்தா இவன் சந்தோஷப்படுவான், வளர வளர அவன் மனசுல ஜானகி மேல ஆசை வந்தது, அந்த ஆசை கல்யாணம் வரைக்கும் கொண்டு போனது, இப்ப அந்த கல்யாணமே இல்லைன்னு ஆயிடுச்சி”

  

”இருந்தாலும் தாலி கழட்ட சொல்லாம இருந்திருக்கலாமே மாமா“

  

”ஏன்”

  

”ஒருவேளை மூர்த்தி ஏத்துக்கலைன்னா ஜானகி மறுபடியும் வேங்கையன் கிட்ட வந்திருப்பாளே”

  

”அப்படி ஒரு தப்பு நடந்துடக்கூடாதுன்னுதானே பலவிதமா யோச்சிச்சி தாலியை கழட்ட சொன்னேன், அதுலயும் அவளா கழட்டியிருந்தா கூட எதிர்காலத்தில அவள் திருந்தி வந்தா உடனே வேங்கையன் ஏத்துக்கிட்டு இருப்பான், அதனாலதான் அவனை வைச்சே அந்த காரியத்தை செய்ய வைச்சேன், இனி ஆயுசுக்கும் நடந்ததை மறக்க மாட்டான், அவளையும் ஏத்துக்க மாட்டான்”

  

”அதுக்காக ஜானுவை அப்படியே விட்டுட முடியாதே மாமா பாவம் அவள்“

  

”என்ன பேசற நீ, அவள் முன்னாடியே அந்த மூர்த்தி எப்படி நடந்துக்கிட்டான், அதையெல்லாம் பார்த்தும் அவன்தான் வேணும்னு நம்பிக்கையா போனவளைப் பார்த்து நீ பாவப்படலாமா, அவள் மேல பாவப்பட அவளோட அப்பா அம்மா இருக்காங்க, அவங்க பார்த்துப்பாங்க”

  

”ஆனா அவங்களே ஜானுவை வேணாம்னு சொல்லிட்டாங்களாமே”

  

”அட சொன்னது போல நடக்கனுமா என்ன, ஒருநாள் இல்லை ஒரு நாள் ஜானகி அழுதுக்கிட்டே போனா அவங்க ஏத்துக்குவாங்க, அதெல்லாம் பாசம்மா உனக்கு சொன்னா புரியாது”

  

”அப்படி ஜானு வந்தா அடுத்து அவள் வாழ்க்கை என்னாகும்”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.