போறாங்க, அப்படியே நடந்துக்கிட்டாலும் என் புள்ளைக்காக நான் பொறுத்துக்கிறேன், பாவம் அவன் ஆசைப்பட்டான்னு ஜானகியை அவனுக்கு கட்டிவைச்சி அவன் வாழ்க்கையையே அழிச்சிட்டேன், செஞ்ச தப்புக்கு பிராயசித்தம் செய்யப் போறேன், ஒரு விசயத்தை மட்டும் ஞாபகத்துல வைச்சிக்க”
”என்னது மாமா”
”கடைசிவரைக்கும் நீ அவனை விட்டு பிரியக்கூடாது, அவன் உன்னை இப்ப ஏத்துக்க மறுத்தாலும் கொஞ்ச நாள் போனா ஏத்துக்குவான், அதுவரைக்கும் நீ பொறுமையா இருக்கனும்”
”கண்டிப்பா இருப்பேன் மாமா”
”அது நாள் கணக்காகலாம் இல்லை மாசக்கணக்கோ வருஷக்கணக்காகூட ஆகலாம் அதுவரைக்கும் உன்னால அவனுக்காக காத்திருக்க முடியுமா”
”அவர்தான் என் உலகம்னு நினைச்சி வந்துட்டேன், அவருக்காக காத்திருக்கற தருணங்கள் கூட எனக்கு பொக்கிஷம் மாதிரி மாமா, எத்தனை வருஷம் என்ன நான் சாகறவரைக்கும் கூட அவருக்காக நான் காத்திருப்பேன், கடைசி வரைக்கும் அவர் ஏத்துக்கலைன்னாலும் பரவாயில்லை, அவர் நினைவாவே வாழ்ந்து என் வாழ்க்கையை முடிச்சிக்குவேன் மாமா”
”போதும்மா இந்தளவுக்கு நீ தெளிவா இருந்தாலே சுலபமா வேங்கையன் மனசை கலைச்சிடலாம் சரி அட்ரஸ் சொல்லும்மா”
”மாமா இது அவசியமா”
”ஆமாம் கட்டாயம், விசயத்தை உன் வீட்ல சொல்லனும், நீ கவலைப்படாத இதனால உன் அப்பா அம்மா வெறுப்பை நீ சம்பாதிக்க மாட்ட என்னை நம்பு”
”எப்படி மாமா ஆரம்பத்தில என்னை வெறுத்த நீங்க, இப்ப எனக்காக இவ்ளோ ஆதரவா பேசறீங்களே” என கேட்க அவரோ கலகலவென சிரிக்க அவளோ குழம்பி