(Reading time: 23 - 45 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”இனிமேல தெரிஞ்சிக்குவா“

  

”கடைசி வரைக்கும் மூர்த்தி அவளை ஏத்துக்கலைன்னா என்னாகும்“

  

”அதுக்கு வாய்ப்பில்லை, ஜானகி அவனை விடமாட்டா அது அவனுக்கு நல்லாவே தெரியும், அவனே நேரா பார்த்துட்டானே அவனுக்காக தாலியை கூட தூக்கி எரிஞ்சிட்டு போயிருக்கா, அவனால அவளை ஒண்ணும் செய்ய முடியாது, கடைசியில அவன் ஜானகியை ஏத்துக்குவான் பாரு“ என சொல்ல மஹதி சற்று ஆறுதல் அடைந்தாலும் கலக்கத்துடன் இருந்தாள் அதைக்கண்டபடி வந்த வீரசிங்கமோ

  

”சின்ன மருமகளே” என அழைக்க அவளோ

  

”மாமா” என்றாள் அதைக்கேட்டு அவர் கலகலவென சிரிக்க அவள் குழம்பினாள்

  

”என்ன கண்டதையெல்லாம் யோசிச்சிக்கிட்டு இருக்கப் போல, விட்டுத்தள்ளு அவங்கவங்க வாழ்க்கையை அவங்கவங்க பார்த்துப்பாங்க, நீ உன் வாழ்க்கையை பாரு”

  

”எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை மாமா, அவர் வேற கோபமா கிளம்பி போயிருக்காரு, விரக்தியில ஏதாவது தப்பான விசயம் செய்துக்கிட்டார்ன்னா அய்யோ”

  

”வேங்கை ஒரு வீரன் கோழை மாதிரி தப்பான விசயத்தை அவன் செய்துக்க மாட்டான், என்ன ஒரே நொடியில அவன் வாழ்க்கை உடைஞ்சிப் போனதை நினைச்சி வருத்தத்தில இருப்பான், ஜானகி இப்படி நடந்துக்கிட்டது அவனுக்கு பெரிய அதிர்ச்சிதானே, இப்பகூட அவன் தனக்காக இல்லை ஜானகிக்காகதான் கவலைப்பட்டுக்கிட்டு கிடப்பான், மூர்த்தி அவளை ஏத்துக்கிட்டானா இல்லையான்னுதான் யோசிப்பான்”

  

”அவ்ளோ பிடிக்குமா அவருக்கு ஜானுவை”

  

”ஆமாம் ரொம்ப பிடிக்கும், மூர்த்தி போல பொண்ணுங்ககிட்ட சகஜமா பழகற குணம்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.