(Reading time: 26 - 52 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

பெரிசான்னு பாருங்க, ஒருவேளை அவனால காயம் குணமாகியும் இங்க வேலைக்கு வர்ற தகுதியில்லைன்னா அவனுக்கு கணிசமான தொகையை கொடுத்துடுங்க“

  

”சின்னய்யா இது எல்லாம் எதுக்கு”

  

”இருக்கட்டும் நம்ம கார்மெண்ட்ஸ்ல வேலைக்கு வந்து இப்படி நடந்திருக்கு, ஒரு நஷ்டஈடா இருக்கட்டுமே ஒருவேளை அவன் குணமாகி வேலைக்கு வந்தா சேர்த்துக்குங்க, அதுவரைக்கும் அவனோட  தினகூலியை அவனோட வீட்ல கொடுத்துடுங்க”

  

”சரிங்க சின்னய்யா ஆமா கார் கேட்டீங்களே என்ன மாதிரி கார் வேணும்“

  

“என் தாத்தா வைச்சிருக்காரே அதே போல கார் வேணும்”

  

”அந்த காரே உங்களுக்கு தந்தது தானே”

  

”வாஸ்தவம்தான் ஆனா, அந்த காரை ஓட்ட வீராக்கு தகுதியில்லைன்னு என் மாமா சொன்னாரு, வீராக்கு இல்லாத தகுதி எனக்கெதுக்குன்னு நான் அந்த காரை அவருக்கே தந்துட்டேன்”

  

”வீராவா சின்னய்யா, அவன் எங்க ஆளாச்சே, அது தப்புங்கய்யா உங்க காரை எப்படி அவன் ஓட்டறது, இந்த விசயம் உங்க வீட்ல தெரிஞ்சா பெரிய பிரச்சனையாயிடும்”

  

”என்ன நீங்களும் இப்படி பேசறீங்க, என் காரை யார் ஓட்டனும் ஓட்டக்கூடாதுன்னு முடிவு எடுக்க வேண்டியது நான்தான்”

  

”இருந்தாலும் பெரிய ஐயாவுக்கு இது தெரிஞ்சா”

  

”எனக்கு கவலையில்லை, நீங்க போய் நான் சொன்ன வேலைகளை பாருங்க ம்” என சொல்ல மேனேஜரும் சரி சரியென தலையாட்டிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றான். அவர் சென்றதும் அவர் தந்த ஃபைல்களை புரட்டி சரிபார்க்கலானான் அகத்தியன்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.