அப்படியா இருக்கு ஏதோ பணக்கார பொண்ணாட்டம் எம்புட்டு அழகா பகட்டா இருக்காப் பாரு, இம்புட்டு அழகா நம்ம வீதியில கூட ஒருத்தியும் இல்லை”
”ஆமாமாம் கேள்விப்பட்டேன் அழகோட மட்டுமில்லாம புத்திசாலியாவும் இருக்காளாம், கார்மெண்ட்ஸ்க்கு முதல்ல வந்தப்ப பேக்கிங் பகுதியில வேலை தந்திருக்காங்க, அங்க போய் என்ன மாயவித்தை செய்தாளே கணக்குபிள்ளை வேலையை தந்திருக்காங்களாம் பார்த்தியா பொண்ணு அழகா இருக்கவும் பெரிய பதவியை தர்றாங்க போல”
”அழகா இருந்தா மதிக்கனுமா என்ன, அவள் பெரிய உலக அழகியாவே இருந்தாலும் நம்ம ஊரை பொருத்தவரை அவள் கீழவீதியை சார்ந்தவதான், நமக்கு முன்னாடி அவள் கால்தூசிக்கு சமானம்”
”ஆமா இ்பபடி பேசி பேசிதான் ஒருநாள் அவள்கிட்ட போய் அவமானப்பட்டு வந்த அதை நீ மறந்துட்டியா“
”மறக்கலை மறக்கற விசயமா அது, எவ்ளோ திமிர் இருந்தா என்னையே அவமானப்படுத்தியிருப்பா“
”பின்ன அவள்தான் எரிமலை போல சுடுவாளே, நீ எதுக்கு அவள் கையை பிடிச்சி இழுத்த, அதான் நெருப்பு போல உன்னை வார்த்தையால எரிச்சிட்டு போயிட்டா இனி அவள் பக்கம் கூட நீ போக மாட்ட”
”ஒரு நாள் வசமா மாட்டுவா அப்ப இருக்கு அவளுக்கு”
”உன்னால அவளை ஒண்ணும் செய்ய முடியாது, அவள் நிழலை தொட்டாக்கூட நெருப்பை கக்குவா வேணாம் விடு, அவளை விட்டு ஒதுங்கிப் போறதுதான் நமக்கு நல்லது”
“அப்படியெல்லாம் அவளை விடமுடியாது, என்னை அவள் அவமானப்படுத்தினதுக்கு அவளை நான் பழிவாங்கியே தீருவேன்”
”உன்னால என்ன செய்ய முடியும் அவளுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சின்னா கீழவீதியே