”எத்தனை முறை சொல்றது சின்னய்யான்னு கூப்பிடாதீங்கன்னு, சார்ன்னு கூப்பிட்டு பழகுங்க”
”பழகிடுச்சி சின்னய்யா இந்தாங்க இந்த நாலு பைலை சரிபார்த்து கையெழுத்து போட்டீங்கன்னா, நான் வேலையில இறங்குவேன்“
”முதல்ல உட்காருங்க”
”இருக்கட்டும்ங்க”
”சேர்ல உட்காருங்கன்னு சொன்னேன்”
”நானா நான் எப்படி” என தயங்க
”என்ன எப்படி நீங்க இந்த கார்மெண்ட்ஸ் மேனேஜர்தானே, அப்புறம் என்ன”
”என்னதான் நான் மேனேஜரா இருந்தாலும் கீழவீதியை சார்ந்தவன், உங்க முன்னாடி நான் சேர்ல உட்கார்ந்தா அது அவ்ளோ நல்லாயிருக்காது”
”இதப்பாருங்க உங்களோட அனுபவம், திறமை இதை பார்த்துதான் உங்களுக்கு இந்த மேனேஜர் வேலையை கொடுத்தேனே தவிர நீங்க எந்த வீதியை சார்ந்தவங்கன்னு நான் ஒருநாளும் பார்க்கலை, உங்களோட முதலாளி நான் சொல்றேன் சேர்ல உட்காருங்க” என்றான் அழுத்தமாக வேறுவழியின்றி தயங்கி தயங்கியே மேனேஜர் குமரப்பன் இருக்கையில் அமர்ந்தார்.
அடுத்த நொடியே கதவை திறந்துக்கொண்டு உள் நுழைந்தான் சூப்பர்வைசரான கார்கோடகன். அவனைக்கண்ட மறுநொடி இருக்கையில் அமர்ந்திருந்த குமரப்பன் அவசரகதியில் எழுந்து நின்றான். அதைக் கண்டதும் கார்கோடகனுக்கு கோபம் எழுந்தது
”யோவ் எவ்ளோ கொழுப்பு இருந்தா சின்னய்யா முன்னாடி சேர்ல உட்காருவ, அவ்ளோ