(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

எப்படியாவது அகத்தியனிடம் இருந்து அந்த ஃபைலை வாங்க வேண்டும் என்ன செய்வது என யோசிக்கையில் அவருக்கு நாச்சியாவின் நினைவு வந்தது உடனே அவளை நோக்கிச் சென்றார்

  

”ஏய் நாச்சியா உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா என்னையே மாட்டிவிடுவ” என கேட்க அவள் பயப்படவில்லை மாறாக

  

”இந்த வேலையை நான் எப்பவோ செய்திருக்கனும், இதுவே லேட்தான் எப்படியோ உங்க வண்டவாளம் தண்டவாளத்தில ஏறினது நினைச்சி சந்தோஷமா இருக்கு, இனிமேலயாவது இந்த கார்மெண்ட்ஸ் ஒழுங்கா இருக்கும் ஆமா உங்களை வேலையை விட்டு தூக்கிட்டாங்களாமே இன்னுமா இங்க நிக்கறீங்க கிளம்பு கிளம்பு இங்கலாம் இருக்க கூடாது ம் போ” என அதட்ட அங்கமுத்துவிற்கு கோபம்

  

”என்னடி என்னையே அதட்டற, கீழவீதி பொண்ணுக்கு இருக்கிற தைரியத்தை பாரு, யாரு உனக்கு இவ்ளோ இடம் தந்தது அந்த அகத்தியன் இருக்கற தைரியத்தில ஆடறியா இரு இரு அவனை ஒரு வழி பண்ணிட்டு அப்புறம் உன்னை ஒரு கதியாக்கறேன் என்னையா பகைச்சிக்கிட்ட, இன்னிக்கு நடந்ததை நினைச்சி நீ நிச்சயம் வருத்தப்படுவடி வருத்தப்பட வைக்கிறேன்” என பொங்கிவிட்டு சென்றுவிட நாச்சியாவிற்கு சிரிப்பாக இருந்தது கலகலவென சிரித்தாள்.

  

அன்று மாலையே வெவ்வேறு இடங்களில் சதித்திட்டம் கூட்டப்பட்டது. அங்கமுத்து அடியாட்கள் சிலரை ஏற்பாடு செய்து எப்படியாவது அகத்தியன் காரில் செல்லும் போது வழியில் அவனது காரை மடக்கி அந்த அக்கவுண்ட் ஃபைலை பறித்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பக்கம் சதித்திட்டம் நடக்க

  

இன்னொரு பக்கம் பழைய டிரைவரோ தனது கூட்டாளிகளை வைத்துக் கொண்டு

  

”இன்னிக்குதான் சரியான நாள் கார்மெண்ட்ஸ்ல ரெய்டு நடந்ததால எப்படியும் சின்னய்யா லேட்டாதான் வீட்டுக்குப் போவாரு, அந்தச் சமயம் பார்த்து அவரோட வண்டியை மறிச்சி அவரையும் அந்த வீராவையும் அடிச்சி காலை உடைக்கனும், இந்த வாய்ப்பை நழுவ

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.