விடக்கூடாது, காரியம் முடிஞ்சதும் நாம நினைச்சபடியே ரயிலை பிடிச்சி வடமாநிலத்துக்கு போயிடனும் யாராலயும் நம்மளை தேட முடியாது” என சொல்ல அவனது கூட்டாளிகளும் சரியென தலையாட்டி தயாரானார்கள்.
மறுபக்கம் நாச்சியாவுக்காகவே டீக்கடையில் ஒரு சதித்திட்டம் ஓடியது
”பொறுத்து பொறுத்து பார்த்தாச்சி, நாளும் ஓடிக்கிட்டே இருக்கு என்னிக்குதான் நீ அந்த நாச்சியாவை சிக்க வைப்ப“
”அந்த நாள் இன்னிக்குதான்”
”எப்படி”
”இன்னிக்கு அவள் வீட்டை கண்காணிச்சேன், அவளுக்கு சீக்கிரமா கல்யாணம் ஆகனும்னு அவளோட அப்பா அம்மா இரண்டு பேரும் திருப்பதிக்கு கிளம்பிட்டாங்க, கார்மெண்ட்ஸ்லயும் இன்னிக்கு ரெய்டுங்கறதால நாச்சியா தனியாதான் வீட்டுக்குப் போவா, அவள் வீட்ல அவள் மட்டும் தனியா இருக்கறப்ப நான் நைஸா உள்ள போய் ஒரு இடத்தில உட்கார்ந்து விடிகாலையில முக்காடு போட்டுக்கிட்டு நான் வெளியே போவேன், அதை யாராவது நாலு பேரு பார்த்தா கூட போதும், அப்பா அம்மா இல்லாத நேரம் பார்த்து நாச்சியா எவனோ ஒருத்தனை வீட்டுக்குள்ள வரவழைச்சிருக்காள்ன்னு கதை கட்டுவாங்க, கதை பெரிசாகி அவள் மேல பழி விழும், அவளோட அப்பா அம்மா திரும்பி வர்றதுக்குள்ளயே அவளை நடுத்தெருவுக்கு இழுத்து பஞ்சாயத்து வைச்சி அவளை களங்கப்படுத்தி ஊருக்கு நேர்ந்து விடனும், நாளைக்கே அவளை நான் அனுபவிக்கப் போறேன்”
“அப்ப நானு”
”டேய் நான் நாளைக்குன்னு நீ அதுக்கு அடுத்த நாளு போதுமா”
”ஆனா நாச்சியா தைரியசாலியாச்சே, அடிச்சி வெளுத்துட்டாள்னா“
”ஊரைகூட்டி அவளை அவமானப்படுத்தினா அதுலயே அவள் மனசு உடைஞ்சி பலகீனமா