”அமைஞ்ச வாழ்க்கையே பாதியில போன பின்னாடி புது வாழ்க்கை எனக்கெதுக்கு வேணாம்”
”நீ என்ன தியாகியா, விட்டுக்கொடுக்கற அளவுக்கு இங்க எதுவும் நடக்கலை, எனக்கு கோவலன் மேல காதல் இருந்தது, எப்போ உனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆச்சோ அப்பவே என் காதலை நான் மறந்துட்டேன், அது வெறும் ஈர்ப்புதான் நான் விலகிப்போறேன், நான் இல்லைன்னா தன்னால கோவலன் உன்கிட்ட வருவாரு”
என சொல்ல கோவலன் அதிர்ந்து
”முடியாது இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என சொல்ல மாதவியோ கோவலனிடம்
”போதும் நிறுத்துங்க இப்படி யாரும் சந்தோஷமா இருக்க விடாம நீங்க பிடிவாதமா இருக்கறது எனக்குப் பிடிக்கலை, உங்களை விரும்பின நானே இப்ப உங்களை வெறுக்கறேன் என்னை விட்டுடுங்க ப்ளீஸ்” என சொல்ல அவன் ஒப்புக் கொள்ளவில்லை.
உதயமூர்த்தி கண்ணகி கோவலன் மாதவி என நால்வரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள் ஒருவரின் கருத்து இன்னொருவருக்கு பிடிக்கவில்லை வாய் சண்டை அதிகமானது. 2 மணி நேரம் கழித்து ஓய்ந்தே போனார்கள் நால்வரும் கடைசி வரை கோவலன் தெளிவாக இருந்தான் கண்ணகியும் தெளிவாக இருந்தாள் மாதவிதான் குற்ற உணர்வில் தவித்தாள்.
கண்ணகியோ உதயமூர்த்தியிடம்
”வக்கீலை கூப்பிடுங்க எனக்கும் கோவலனுக்கும் நேரத்தோட விவாகரத்து வாங்கிடனும்”
”இதுதான் உன் முடிவுன்னா நீ சொன்னதை செய்றேன்” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட கண்ணகி கோவலனிடம்
”நீங்க ஆசைப்பட்டது நடக்கும் பதிலுக்கு நீங்க ஒண்ணு செய்யனும்”