”உண்மையில உங்களுக்கு என் மேல காதல் இருந்தா என்னை தடுக்காதீங்க என்னை தேடி வரும் போது விவாகரத்தாகி வாங்க, அப்புறம் நாம சேர்ந்து வாழலாம்”
”அதுவரைக்கும் நான் கண்ணகியோட இருக்கனுமா“
“அது உங்க விருப்பம்”
”நீ ஏன் இப்படி சொல்றேன்னு எனக்குப் புரியுது மாதவி, இந்த ஒரு வருஷத்தில எனக்கு கண்ணகியை பிடிச்சிப் போயிடும்னு நம்பறியா, அதுதான் இல்லை அப்படியொரு விசயம் என் வாழ்க்கையில நடக்காது”
”நான் முடிவு எடுத்துட்டேன் ஒரு வருஷம் கழிச்சி உங்களை பார்க்க வரேன், அப்பவும் உங்க மனசுல நான்தான் இருந்தேன்னா கண்ணகியோட வாழ முடியாம நீங்க இருந்தீங்கன்னா அப்புறம் நாம கல்யாணம் செய்துக்கிட்டு வாழலாம் சரியா” என சொல்ல அதைக்கேட்டு அவன் குழம்ப மாதவியோ கண்ணகியிடம் வந்தாள்
”மாதவி ஏன் இப்படி நடந்துக்கற”
”நீ தியாகி மாதிரி உறவை விட்டுக்கொடுக்கலாம் ஆனா நான் தியாகியாக கூடாதா”
”நீ நினைக்கிறியா கோவலன் என்னை விரும்புவார்ன்னு”
”ஆமாம் எனக்கு நம்பிக்கையிருக்கு”
”உன் நம்பிக்கை பொய்யாகப்போகுது“
”அதுக்கு இன்னும் ஒரு வருஷ காலம் இருக்கு நான் இப்ப கிளம்பறேன்“
”எங்க போற”