(Reading time: 24 - 48 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

இப்படியொரு அவப்பெயரா, இப்படியெல்லாம் எனக்கு கெட்டப்பெயர் வரும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா உங்க பேரனை நான் காப்பாத்தியிருந்திருக்கவே மாட்டேன்”

  

”யார் அவனை அடிச்சது”

  

”அதை அவர்கிட்ட கேட்கனும், எனக்கு தெரியாத விசயத்தை பத்தி தெரிஞ்ச மாதிரி பேச எனக்கு சுத்தமா வராது“

  

”ரொம்ப துடுக்கா பேசற”

  

”இதைதான் என் அம்மாவும் அடிக்கடி சொல்வாங்க”

  

”அம்மாவா”

  

”ஆமாம் நீ அப்படியே பெரிய வீட்டு அம்மாவை போல இருக்கேன்னு அடிக்கடி சொல்வாங்க”

  

”பெரிய வீட்டு அம்மாவா, நீ யாரை பத்தி சொல்ற” என பதட்டமாக கேட்க அதற்கு நாச்சியா

  

”உங்க மனைவியை பத்திதான் சொல்றேன், இதுவாவது பரவாயில்லை என் அப்பா இருக்காரே அப்பா”

  

”அவனுக்கென்ன”

  

”என் அப்பா இதுவரைக்கும் என்னை நாச்சியான்னு கூப்பிட்டதில்லை, சின்னம்மா சின்னம்மான்னுதான் கூப்பிடுவாரு, எங்கம்மாவையும் அப்படித்தான் கூப்பிட வைச்சாரு, நான் கூட கேட்டேன் எதுக்கு இப்படி கூப்பிடறீங்கன்னு, இது என்ன எனக்கு செல்லப்பெயரான்னு அதுக்கு அவர் சொன்னாரு” என இழுக்க சங்கமேஸ்வரனோ அதிர்ந்து

  

”என்னத்த சொல்லி தொலைச்சான் சொல்லு”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.