”யோசிச்சிட்டேன்“
”உங்களுக்கும் யாராவது இருக்காங்களா”
”இருக்காங்க”
”யாரு“
”சின்ன மருமகள்” என சொல்ல ஜானகி வாய் பிளந்தாள், மூர்த்திக்கு கோபம் வரவில்லை, மென்மையாக சிரித்தான் குபேரனுக்கும் வேணிக்கும் குதூகலம் தாளவில்லை, வேங்கையனை பிடித்துக் கொண்டார்கள்
”நிஜமாவா சொல்ற சின்ன மருமகள் வரப்போறாளா” என கேட்க
”அவள் எங்க வருவா, நான்தான் போய் கூட்டிட்டு வரனும் போல இருக்கு”
”எது எப்படியோ நல்லது நடந்தா சரி” என சொன்ன வேணி சட்டென ஜட்ஜிடம்
”அம்மா நேரம் போகுது, சீக்கிரமா எங்க பொண்ணுக்கு டைவர்ஸ் கொடுங்க அவளை மூர்த்தி கையில ஒப்படைச்சிட்டு வேங்கையனுக்காக நாங்க சின்ன மருமகள் வீட்டுக்கு போய் வரனும், நேரம் இல்லை சட்டுபுட்டுன்னு முடிச்சி வைங்கம்மா” என சொல்ல ஜட்ஜ்க்கு சிரிப்பே வந்தது
”போன முறை நீங்க எல்லாரும் வருத்தமா இருந்தீங்க ஆனா இப்ப எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்க, ஆமா அந்த சின்ன மருமகள் யாரு அவளாலதான் நீங்க எல்லாருமே மாறினீங்களா” என கேட்க அனைவருமே ஆமாம் என்பது போல் தலையாட்ட அதற்கு மேல் தாமதிக்காமல் வேங்கையனுக்கும் ஜானகிக்கும் விவாகரத்து வழங்கினார். அதைக்கண்டு அனைவருமே மகிழ்ந்து குதூகலமானார்கள்.
மூர்த்தி ஜானகியின் கையை பற்றிக் கொள்ள அவளோ